Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடிகர் தனுஷூடன் மீண்டும் இணைந்த வாரிசு நடிகர்.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்!
சென்னை: நடிகர் தனுஷுடன் பிரபல வாரிசு நடிகர் மீண்டும் இணைந்துள்ள போட்டோ இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் பிஸியான நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.
ஜன்னல்
வழியே
பாயும்
மின்சாரம்
நீயடி...
கவர்ச்சி
கலவரத்தில்
ஷில்பா
மஞ்சுநாத்
!
பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். அதுமட்டுமின்றி ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.

தனுஷுடன் அசுரன் நடிகர்
தற்போது நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் மித்ரன் ஜவஹருடன் 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தில் அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்த இளம் நடிகர் கென் கருணாஸ், 'திருச்சிற்றம்பலம்' படத்தின் இணைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மீண்டும் தனுஷுடன் கூட்டணி
கென் கருணாஸ் தனது அப்பாவும் நடிகருமான கருணாஸ் மற்றும் தனுஷுடன் இருக்கும் புகைப்படம் நேற்று முதல் வைரலாகி வருகிறது. அசுரன் படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்தார் கென் கருணாஸ். அவரது நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் நடிகர் தனுஷூடன் மீண்டும் இணைந்துள்ளார் கென் கருணாஸ்.

மூன்று ஹீரோயின்கள்
முன்பு 'டி 44' என்று குறிப்பிடப்பட்ட இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். அதாவது ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ஆவர். மேலும் பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தின் கதை இரண்டு கால கட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனிருத் இசை
ஒன்று கல்லூரிப் பகுதிகளிலும் மற்றொன்று அவரது வாழ்க்கையின் பிற்பகுதியிலும். இருக்கும் என கூறப்படுகிறது. தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது, மேலும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.