»   »  முப்பெரும் ‘கான்’களின் சங்கமம்... ஒரே படத்தில்... இந்தக் கனவு மெய்ப்படுமா?

முப்பெரும் ‘கான்’களின் சங்கமம்... ஒரே படத்தில்... இந்தக் கனவு மெய்ப்படுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷாரூக் கான், சல்மான் கான் மற்றும் அமீர்கான் என பாலிவுட்டின் மூன்று ‘கான்'களும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்ப காலத்தில் நடிகர்கள் ஈகோ பார்க்காமல் ஒன்றாக சேர்ந்து நடித்து வந்தனர். ஆனால், காலப்போக்கில் தனக்கென ரசிகர் வட்டம் உருவானதைத் தொடர்ந்து, பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் படங்கள் குறைந்து விட்டது.

அந்தவகையில், பாலிவுட் பாஷாக்களான ஷாரூக், சல்மான் மற்றும் அமீர் ஆகிய மூவரையும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

இணைக்கும் முயற்சியில் நடியவாலா...

இணைக்கும் முயற்சியில் நடியவாலா...

இதற்கான வேலைகளில் தயாரிப்பாளர் சாஜித் நடியவாலா இறங்கியுள்ளாராம். மேலும், தானே அப்படத்தை இயக்கவும் சாஜித் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரமாண்டமாக இருக்கும்...

பிரமாண்டமாக இருக்கும்...

சாஜித்தின் இந்தக் கனவு மெய்ப்பட்டால், நிச்சயம் அது பிரம்மாண்டமான படமாகத் தான் இருக்கும் என பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள். காரணம் மூன்று கான்களுக்குமே எண்ணிலடங்கா ரசிகர்கள் உள்ளனர்.

சவாலான வேலை...

சவாலான வேலை...

எனவே, அவர்களைத் திருப்தி படுத்தும் வகையில், திரையில் மூன்று பேருக்கும் சமமான வேடத்தைக் கொடுப்பது நிச்சயம் சாஜித்திற்கு சவாலான வேலை தான்.

ஏற்கனவே இணைந்த ஷாருக் - சல்மான்...

ஏற்கனவே இணைந்த ஷாருக் - சல்மான்...

ஏற்கனவே, ஷாருக்கும் சல்மானும் மூன்று படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். அதேபோல், சல்மானும், அமீர் கானும் சேர்ந்து நடித்துள்ளனர். ஆனால், இதுவரை அமீரும், சல்மானும் சேர்ந்து நடித்ததேயில்லை.

வசூல் மழை பொழியும்...

வசூல் மழை பொழியும்...

சாஜித் இயக்கத்தில் ஷாரூக், சல்மான் மற்றும் அமீர் நடித்துப் படம் ஒன்று ரிலீசானால், நிச்சயம் அது வசூல் மழை பொழியும் என்பதில் துளியும் ஐயமில்லை.

ரஜினியும், கமலும் இணைவார்களா?

ரஜினியும், கமலும் இணைவார்களா?

பாலிவுட்டைப் போலவே தமிழிலும் ஆரம்ப காலத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்த ரஜினியையும், கமலையும் மீண்டும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
If this turns out to be true, then it will certainly be Bollywood’s biggest film ever. Buzz has it that producer Sajid Nadiadwala is planning a film with all the three Khans – Shah Rukh Khan , Salman Khan and Aamir Khan on board.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil