twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராணியின் 'மர்தானி' படத்தை குழந்தைகளை பார்க்க விடாதீங்க: ஆமீர் கான்

    By Siva
    |

    மும்பை: நடிகை ராணி முகர்ஜியின் மர்தானி படத்தை குழந்தைகள் பார்க்கக் கூடாது என்று பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

    இந்தி நடிகை ராணி முகர்ஜி நடிப்பில் அண்மையில் வெளியான படம் மர்தானி. இந்த படத்தில் ராணி கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியது.

    ராணி ஆக்ஷனில் கலக்கும் இந்த படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து நடிகர் ஆமீர் கான் கூறுகையில்,

    ஆமீர்

    ஆமீர்

    மர்தானி படத்தில் ராணி அருமையாக நடித்துள்ளார். ஆனால் படத்தில் வரும் சில வார்த்தைகளால் அதை குழந்தைகள் பார்ப்பது நல்லது அல்ல.

    குழந்தைகள்

    குழந்தைகள்

    மர்தானியை குழந்தைகள் பார்ப்பதை நான் விரும்பவில்லை. படத்தில் வரும் சில வார்த்தைகள், வன்முறை காட்சிகளை குழந்தைகள் பார்க்காமல் இருப்பது நல்லது.

    ராணி

    ராணி

    ராணி படத்தை மறுபடியும் சென்சாருக்கு அனுப்பி 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பார்க்க அணுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் ராணியின் கருத்தை நான் ஏற்க மாட்டேன்.

    மதிக்கிறேன்

    மதிக்கிறேன்

    ராணிக்கு வேறு கருத்து இருக்கலாம். அவரை நான் மிகவும் மதிக்கிறேன். நான் படத்தை பார்த்தேன். அதில் வன்முறை உள்ளது.

    கவனம்

    கவனம்

    தற்போது நான் மர்தானியை பற்றி பேசவில்லை. சில படங்களில் மோசமானவற்றை காண்பிக்கிறார்கள். அதை படத்தில் காண்பிப்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நம் குழந்தைகள் எந்த வகையான படங்களை பார்க்கிறார்கள் என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றார் ஆமீர்.

    English summary
    Bollywood superstar Aamir Khan, who had praised actress Rani Mukherjee for her work in 'Mardaani', has said young children should not watch the film, primarily because of "kind of language" used in it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X