அப்போ சிவகார்த்திகேயனுக்காக இல்லையா? தியேட்டரில் வெளியாகும் டாக்டர்.. கேஜிஆர் போட்ட ட்விஸ்ட் ட்வீட்!
சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் தியேட்டரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேஜிஆர் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
மேலும், ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்காக மட்டும் தான் இந்த முடிவு என கேஜிஆர் தயாரிப்பு நிறுவனம் ட்விஸ்ட்டுடன் போட்டுள்ள ட்வீட் சிவகார்த்திகேயன் ரசிகர்களை சற்றே கடுப்பாக்கி உள்ளது.
கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

தியேட்டரில் டாக்டர்
ஒடிடி அல்லது நேரடியாக தொலைக்காட்சியில் டாக்டர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடியாக அடுத்த மாதம் திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் வெளியாகும் என்கிற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் தற்போது ட்வீட் போட்டு அறிவித்துள்ளது.

பீஸ்ட் இயக்குநர்
நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், அர்ச்சனா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் டாக்டர். இந்த படத்தின் ரிலீஸ் தாமதமாக சிவகார்த்திகேயன் டான் ஷூட்டிங்கில் பிசியாக, இயக்குநரோ தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயன் படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில், மீண்டும் கேஜிஆர் உடன் இணைந்து உருவான படம் தான் டாக்டர். ஆனால், இந்த படமும் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக கிடப்பில் கிடந்ததால் தயாரிப்பு தரப்புக்கும் ஹீரோவுக்கும் இடையே பிரச்சனை உருவானதாக கூறப்பட்டது.

தேர்தலுக்காக தள்ளி போகிறோம்
இந்த ஆண்டு மார்ச் 26ம் தேதியே டாக்டர் படம் தியேட்டரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென தேர்தல் வருவதை முன்னிட்டு படத்தின் ரிலீஸை தள்ளிப் போடுகிறோம் என தயாரிப்பு தரப்பு கூறியது. அதற்கும் இந்த படத்திற்கும் என்ன சம்மந்தம் என கேள்விகள் கிளம்பின. ஏப்ரல் மாதம் வெளியான கார்த்தியின் சுல்தான் மற்றும் தனுஷின் கர்ணன் படங்களுக்கு தியேட்டரில் கூட்டம் குவிந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ரம்ஜான் ரிலீஸ், ஒடிடி ரிலீஸ் என மாற்றி மாற்றி அறிவிக்கப்பட்டு, பின்னர் எப்போ ரிலீஸ்னே தெரியாத நிலையும் உருவானது.
Recommended Video

ட்வீட்டில் ட்விஸ்ட்
இந்நிலையில், டாக்டர் திரைப்படம் ஒடிடி மற்றும் டிவியில் ரிலீஸ் கிடையாது என்பதை உறுதிபடுத்தி உள்ள தயாரிப்பு நிறுவனம் அடுத்த மாதம் டாக்டர் படம் திரைக்கு வருவதையும் உறுதி செய்துள்ளது. ஆனால், எந்த தேதியில் என்பதை இப்பவும் அறிவிக்கவில்லை. மேலும், இந்த முடிவு ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ட்விஸ்ட் கலந்து ட்வீட்டை போட்டுள்ளது.

சிவகார்த்திகேயனுக்காக இல்லையா
டாக்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாக வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் ரொம்பவே ஆசைப்பட்டார். அதன் காரணமாகவே தயாரிப்பு தரப்புக்கும் அவருக்கும் பிரச்சனை உருவானது என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்காக என்பதை குறிப்பிடக் கூடாது என்பதற்காக இப்படியொரு ட்வீட்டை தயாரிப்பு நிறுவனம் போட்டுள்ளது என்றும் பல படங்களின் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் சிவகார்த்திகேயன் டாக்டர் ரிலீஸ் பற்றி இதுவரை எந்தவொரு ட்வீட்டும் போடவில்லை.


Click it and Unblock the Notifications











