»   »  கொம்பனின் என் பாத்திரம் பருத்திவீரனுக்கு நேர் எதிராக இருக்கும்! - கார்த்தி

கொம்பனின் என் பாத்திரம் பருத்திவீரனுக்கு நேர் எதிராக இருக்கும்! - கார்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பருத்திவீரனில் நான் நடித்த பாத்திரத்துக்கு நேர் எதிராக கொம்பன் பாத்திரம் இருக்கும். மாமனார் மருமகன் பாசத்தை புதிய கோணத்தில் காட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார் நடிகர் கார்த்தி.

‘குட்டிப்புலி' படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கியிருக்கும் இரண்டாவது படம் கொம்பன்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. பின்னர், படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

கார்த்தி

கார்த்தி

படம் குறித்து நடிகர் கார்த்தி கூறுகையில், "பருத்தி வீரனுக்குப் பிறகு கிராமத்துக் கதைகளைத் தேர்வு செய்வதில் எனக்கு தயக்கம் இருந்தது. காரணம், அந்த சாயலிலேயே நடிப்பதாக குற்றச்சாட்டு வர வாய்ப்பிருக்கிறது.

ஆனால் குட்டிப்புலி முத்தையா இந்தக் கதையைச் சொன்னபோது ரொம்பப் பிடிச்சிருந்தது.

குடிகாரனில்லை

குடிகாரனில்லை

கொம்பனில் நான் குடிகாரனில்லை, பருத்திவீரனுக்கு நேர் எதிரானவன். இந்தப் படத்தில் எனக்கு மாமனாராக நடித்துள்ள ராஜ்கிரணும், அம்மாவாக நடித்துள்ள கோவை சரளாவும் படத்துக்கு மிக அழுத்தமான உணர்வைக் கொடுத்துள்ளனர்," என்றார்.

ராஜ்கிரண்

ராஜ்கிரண்

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ராஜ்கிரண் கூறுகையில், "இந்தப் படம் பார்த்த பிறகு யாராவது ஒரு மாமனார் - மருமகன் ஈகோ மோதலத் தவிர்த்தாலே போதும்.. அதுதான் இந்தப் படத்தின் வெற்றி," என்றார்.

லட்சுமி மேனன் வரவில்லை

லட்சுமி மேனன் வரவில்லை

இந்த நிகழ்ச்சியில் படத்தின் நாயகி லட்சுமி மேனன் வரவில்லை. ப்ளஸ் டூ தேர்வு எழுதிக் கொண்டிருப்பதால் அவரால் வரமுடியவில்லையாம்.

English summary
Karthi says that he played a different village role in Komban and it never reminds you the Paruthiveeran character.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil