KPY பாலா கஷ்டப்பட்ட காட்சிகள்.. வெளியானது காந்தி கண்ணாடி மேக்கிங் வீடியோ!
சென்னை: ஹீரோவாக ஒவ்வொரு காட்சியிலும் நடிக்க கேபிஒய் பாலா கஷ்டப்பட்டு உழைத்த காட்சிகள் மேக்கிங் வீடியோவாக சற்றுமுன் வெளியாகி உள்ளது. இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி காந்தி கண்ணாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் கேபிஒய் பாலா.
ஹீரோக்கள் சொதப்ப ஆரம்பித்த நிலையில், காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறி கலக்கி வருகின்றனர். ராகவா லாரன்ஸ் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறேன் என கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

ஆனால், அவருக்கு முன்னதாக ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான காந்தி கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கேபிஒய் பாலாவுக்கு தியேட்டர்கள் சரியாக கிடைப்பதில்லை, போஸ்டர்களையும் கட் அவுட்களையும் அடித்து நொறுக்குகின்றனர் என பிரஸ் மீட் வைக்கும் போது பக்கத்தில் நின்று ராகவா லாரன்ஸ் ஆதரவு தெரிவித்தார்.
மக்கள் பாராட்டு: தன்னை மட்டுமே முன்னிலை படுத்தாமல் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனாவின் வயதான தம்பதியினரின் காதல் கதையை மையக்கருவாக வைத்து உருவான காந்தி கண்ணாடி படத்தை ஓகே சொல்லி அதில், ஹீரோவாக பாலா நடித்த நிலையில், அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை பார்த்து விட்டு கண்கள் எல்லாம் கலங்கினோம் என ஏகப்பட்ட மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
ஓரளவு வசூல்: அதிகளவில் தியேட்டர்களில் வெளியாகாத நிலையில், குறைவான தியேட்டர்களில் வெளியான நிலையிலேயே காந்தி கண்ணாடி திரைப்படம் 4 நாட்களில் 1.7 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெற்றிமாறன் தயாரித்த பேட் கேர்ள் படம் எல்லாம் பாக்ஸ் ஆபீஸில் மரண அடி வாங்கியது குறிப்பிடத்தக்கது.
காந்தி கண்ணாடி மேக்கிங் வீடியோ: கேபிஒய் பாலா மேக்கப் போட்டு முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமான நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக நடிக்க அவர் வித விதமான பொம்மை டிரெஸ்களை எல்லாம் அணிந்துக் கொண்டும் முகத்தில் பவுடர் அடித்துக் கொண்டு கோமாளி போல நடித்த காட்சிகள் அடங்கிய மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் ஷெரிஃப்பின் கடுமையான உழைப்பையும் படக்குழுவினரிடம் அவரது அணுகுமுறை உள்ளிட்டவை வெளிக்காட்டும் விதம் என அனைத்தும் மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
லாபம் கொடுக்கணும்: ஓடி ஓடி மக்களுக்கு உதவி செய்து வந்த பாலாவுக்காக மக்கள் காந்தி கண்ணாடி படத்தை பார்த்து லாபம் ஈட்டும் படமாக மாற்ற வேண்டும் என பாலாவின் ரசிகர்களும் அபிமானிகளும் சோஷியல் மீடியாவில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 3.75 கோடியில் தான் இந்த படம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவிலேயே படம் போட்ட காசை பாக்ஸ் ஆபீஸ் வசூலிலேயே எடுத்து மிகப்பெரிய வெற்றியை பெறும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











