»   »  மணாளனுக்கு மன்றம் - குஷ்பு மறுப்பு

மணாளனுக்கு மன்றம் - குஷ்பு மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுந்தர்.சிக்கு ரசிகர் மன்றம் அமைக்க சிலர் குஷ்புவை அணுகியுள்ளனர். ஆனால் இப்ப வேண்டாம், அப்புறம் பார்க்கலாம் என்று கை கூப்பி கும்பிட்டு அனுப்பி வைத்து விட்டாராம் குஷ்பு.

Click here for more images

இயக்குநராக கலக்கிய சுந்தர்.சி. இப்போது ஒரு ஆக்ஷன் நாயகன். தலைநகரத்தில் தொடங்கி வீராப்பு வரை நடித்தது குறைந்த படம் என்றாலும் கூட நடித்த படங்களில் பேசப்பட்டுள்ளார், வெற்றிகரமான நாயகனாகவும் நிலை கொண்டு விட்டார்.

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல பழக்கம். ஏதாவது ஒரு நாயகன் ஹிட் ஆகி விட்டால் உடனே அவருக்காக ஒரு கொடிக் கம்பத்தை நட்டு, கொடியை நாட்டி, ரசிகர் மன்றத்தைத் தொடங்கி விடுவார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில் இரண்டு ஹிட் படங்களைக் கொடுத்துள்ள சுந்தர்.சிக்கும் ரசிகர் மன்றம் ஆரம்பித்து, கலக்க ஆசைப்பட்ட சிலர், குஷ்புவை அணுகியுள்ளனர்.

அண்ணி, அண்ணனுக்கு மன்றம் ஆரம்பிச்சுடலாமே என்று அவர்கள் கூறியதைக் கேட்ட குஷ்பு, லேசாக ஜெர்க் ஆகி, அய்யோ, இப்பத்தான் அவர் நடிக்கவே ஆரம்பிச்சிருக்கார். இன்னும் இரண்டு படங்கள் போகட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று கூறி அவர்களை நைச்சியமாக பேசி அனுப்பி வைத்து விட்டாராம்.

குஷ்பு மன்றத்திற்கு அனுமதி கொடுக்க தயங்கியதற்கு அவரது சொந்த அனுபவமே கூட காரணமாக இருக்கலாம். இப்படித்தான் அவருக்கு முன்பு கோவில் கட்டினார்கள் ரசிகர்கள். பின்னர் அந்தக் கோவிலை ரசிகர்களேதான் இடித்துத் தள்ளினார்கள். கற்பு பிரச்சினையின்போதும் கூட ஒட்டுமொத்த தமிழகமே திரண்டு குஷ்புவை வசை பாடித் தள்ளியது.

இதையெல்லாம் மனதில் கொண்டுதான் இன்னும் சில படங்களில் நடித்து ஆழமாக காலூண்றிய பிறகு சுந்தர்.சிக்கு மன்றம் ஆரம்பிக்கலாம் என நினைத்து விட்டார் போல குஷ்பு.

நல்ல சிந்தனைதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil