»   »  கேவி ஆனந்த் படத்தில் மீண்டும் சிம்பு...ஆனால்..!

கேவி ஆனந்த் படத்தில் மீண்டும் சிம்பு...ஆனால்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கே.வி. ஆனந்த் இயக்கிய கோ படத்தில் நடிக்கவிருந்தது சிம்புதான். சில நாட்கள் ஷூட்டிங் போனபின்பு சிம்புவின் டார்ச்சர்களால் கே.வி. ஆனந்தே சிம்புவை தூக்கி விட்டு ஜீவாவை ஒப்பந்தம் செய்தார். ஜீவாவுக்கு அது பெரிய பிரேக்காக அமைந்தது.

KV Anand reunites with Simbu?

இப்போது விஜய் சேதுபதியை வைத்து கவண் படத்தை இயக்கிவரும் கேவி.ஆனந்த் அதில் வில்லனாக டி.ராஜேந்தரை நடிக்க வைத்திருக்கிறார். படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப் பாடலை டிஆர் பாடினால் நன்றாக இருக்கும் என்று கேட்க அவரும் ஓகே சொல்லிவிட்டார். டிஆருடன் அவரது மகன் சிம்புவும் பாடினால் இன்னும் நன்றாக இருக்கும் என இசையமைப்பாளர் ஃபீல் செய்திருக்கிறார். கே.வி.ஆன்ந்த் தயங்க டிஆரே தன் மகனைப் பாட வைப்பதாக உறுதி கொடுத்திருக்கிறார்.

ரெக்கார்டிங்கின் போது கே.வி.ஆனந்தும் சிம்புவும் சந்தித்துக்கொள்வார்களா?

English summary
Director KV Anand is accepting to bringback Simbu to his film, but this time only as a singer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil