»   »  என்னதான் பிரபலம் காமெடியன்னாலும் ஒரு நாளைக்கு ஒரு கோடியா சம்பளம் கேட்பது?

என்னதான் பிரபலம் காமெடியன்னாலும் ஒரு நாளைக்கு ஒரு கோடியா சம்பளம் கேட்பது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரம்மானந்தம்... இவரைப் பார்த்தாலே அரங்கம் அதிரும் அக்கட பூமியில். இங்கேயும் அவருக்கு கணிசமான ரசிகர்கள் உண்டு.

கில்லி, மொழி உள்பட பல தமிழ்ப் படங்களில் பிரம்மானந்தம் கலக்கி இருப்பார். கமலின் சபாஷ் நாயுடுவில் பிரம்மானந்ததுக்கு பிரதான வேடம்.

தெலுங்கில் இவர் இல்லாமல் எந்த ஒரு படமும் வெளியாவதில்லை. எப்போதுமே தனக்கான கால்ஷீட்டை பிசியாகவே வைத்துக் கொள்வார்.

1000 படங்கள்

1000 படங்கள்

தெலுங்கில் மட்டும் 1000 படங்களுக்கும் மேல் நடித்து சாதனை படைத்தவர். கின்னஸ் புத்தகத்தில் கூட இவரது பெயர் இடம் பெற்றிருக்கிறது. பல வருடங்களாக சினிமாவில் இருந்து பல கோடிகளைச் சம்பாதித்துள்ளார்.

சொத்து மதிப்பு தெரியுமா?

சொத்து மதிப்பு தெரியுமா?

இப்போதைக்கு இவரது சொத்து மதிப்பு ரூ 320 கோடிகளாம். மேலும், பல ஏக்கரில் விவசாய நிலங்களும் இருக்கிறதாம். அந்த நிலத்தில் அவ்வப்போது அவரே சென்று விவசாயமும் செய்து வருவாராம்.

செழிப்பான லைஃப் ஸ்டைல்

செழிப்பான லைஃப் ஸ்டைல்

அதுமட்டுமல்லாமல் உயர்தர ஆடி, பென்ஸ் கார்கள் இவரது வீட்டை அலங்கரிக்கின்றனவாம். சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமே வசிக்கும் ஹைதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரம்மாண்ட பங்களாவில் வசித்து வருகிறாராம்.

ஆத்தீ.. இவ்ளோ சம்பளமா?

ஆத்தீ.. இவ்ளோ சம்பளமா?

தெலுங்கிலும், தமிழிலும் தனது மார்க்கெட்டின் உச்சத்தை பார்த்த பிரம்மானந்தம் தனது சம்பளத்தையும் உச்சத்திற்கு எடுத்து சென்றிருக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் கேட்கிறாராம் இவர்.

என்னதான் பிரபலம் என்றாலும் ஒரு நாளைக்கு ஒரு கோடி என்பது கொஞ்சம் அதிகம் இல்லையா..?

English summary
Leading comedian demands Rs 1 cr salary per day Sources say that popular comedy actor Brammanandham is demanding Rs 1 cr per day as his salary.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil