»   »  எனக்கு முதலில் தேசிய விருது கிடைக்கட்டும், அப்புறம் அதை திருப்பிக் கொடுக்கிறேன்: ஷாருக்கான்

எனக்கு முதலில் தேசிய விருது கிடைக்கட்டும், அப்புறம் அதை திருப்பிக் கொடுக்கிறேன்: ஷாருக்கான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நாட்டில் சகிப்புதன்மை குறைந்து வருவதை கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் விருதுகளை திருப்பிக் கொடுப்பதை மதிக்கிறேன். ஆனால் நான் என் விருதை திருப்பிக் கொடுக்க மாட்டேன். எனக்கு தேசிய விருது கிடைக்கட்டும் அதன் பிறகு அதை திருப்பிக் கொடுக்கிறேன் என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர்கள் தங்களின் விருதுகளை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து பாலிவுட் நடிகர் ஷாருக்கானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் கூறுகையில்,

சகிப்புத்தன்மை

சகிப்புத்தன்மை

நாட்டின் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருகிறது. இது மிகப்பெரிய பிரச்சனை ஆகும். நான் செய்ய விரும்பாததை செய்யுமாறு யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு தேசிய விருது கிடைக்கட்டும். அதன் பிறகு அதை நான் திருப்பிக் கொடுக்கிறேன்.

விருதுகள்

விருதுகள்

விருதுகளை திருப்பிக் கொடுத்து வரும் எழுத்தாளர்களின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்காக நானும் விருதை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று இல்லை.

கற்கள்

கற்கள்

அனைத்து பிரச்சனைகள் குறித்தும் நான் என் நிலைப்பாட்டை தெரிவிக்க முடியாது. கருத்து சுதந்திரத்தை பற்றி பேசுகிறோம். நான் கருத்து தெரிவித்தால் மக்கள் என் வீட்டின் மீது கற்களை வீசித் தாக்குகிறார்கள்.

கலைஞர்கள்

கலைஞர்கள்

படைப்பாற்றல் மதம் சார்ந்தது அல்ல. படைப்பாற்றலுக்கும் சாதி, மதத்திற்கும் தொடர்பு இல்லை. கலைஞர்களை மதிக்கிறோம். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது முக்கியம் இல்லை என்றார் ஷாருக்கான்.

English summary
Actor Shah Rukh Khan told that though he respects the writers and filmmakers who have returned their award to condemn the intolerance in the country, he won't do so.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil