Don't Miss!
- Finance
அதானி குழுமத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டி பார்த்த ஹிண்டர்ன்பர்க்.. 3 நாளில் 29% மதிப்பு சரிவு!
- News
பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
- Lifestyle
பிப்ரவரி மாதத்தில் இந்த 4 ராசிக்காரங்க நிறைய பணப் பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்.. உஷாரா இருங்க...
தளபதி விஜய் சொல்லி கேட்காதவர்கள் ரவுடி விஜய் சொல்லி கேட்பார்களா?
சென்னை: தலைப்பை பார்த்து நீங்களாக ஒரு முடிவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பாகாது.
நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. தங்களுக்கு பிடித்த ஹீரோவை உயர்த்திப் பேசியும், பிற ஹீரோக்களை தாழ்த்திப் பேசியும் வருகிறார்கள்.
தமிழகத்தில் இரண்டு பெரிய ஹீரோக்களின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறிவுரை
ட்விட்டரில் ஆவேசப்படும் ரசிகர்களுக்கு தளபதி விஜய் அறிவுரை வழங்கினார். அடுத்தவர்களை கெட்ட வார்த்தைகளால் பேச வேண்டாம், அது நமக்கு அழகல்ல என்று அன்புடன் எடுத்துக் கூறினார். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் ரசிகர்களின் காதில் விழவே இல்லை. விஜய்யின் பேச்சையும் மீறி கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.

சண்டை
விஜய்யை பற்றி ட்வீட் போட்ட நடிகர் கருணாகரனை தளபதி ரசிகர்கள் விளாசியுள்ளனர். உசுப்பேத்துறப்ப உம்முன்னும், கடுப்பேத்துறப்ப கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என்று விஜய் சர்கார் பட விழாவில் கூறியதை அவரின் ரசிகர்கள் பின்பற்றினால் நிச்சயம் அவர் மகிழ்ச்சி அடைவார். அவரின் பேச்சை ரசிகர்களே கேட்காதபோது மக்கள் எப்படி கேட்பார்கள் என்ற கேள்வி வந்துவிடாதா?. யோசிங்க ரசிகர்களே.
|
விஜய் தேவரகொண்டா
தனது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்த்த விஜய் தேவரகொண்டா அறிவுரை வழங்கியுள்ளார். பிறர் நம்மை வெறுத்தாலும் நாம் அன்பையே கொடுப்போம். வாழு, வாழவிடு என்று தெரிவித்துள்ளார் விஜய். அவர் தனது ரசிகர்களை ரவுடிகள் என்று அழைப்பதுடன் தன்னையும் ரவுடி என்றே கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரவுடிகிளப் என்ற ஆப்பை அறிமுகப்படுத்தினார்.
|
நோட்டா
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள நோட்டா படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் ரிலீஸாகிறது. பட ரிலீஸுக்காக மரண வெயிட்டிங் என்கிறார் விஜய் தேவரகொண்டா.