»   »  ஜூனியர் என்.டி.ஆருக்கு வந்த வாழ்வைப் பாருங்க...

ஜூனியர் என்.டி.ஆருக்கு வந்த வாழ்வைப் பாருங்க...

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினிமாக்காரங்க பார்ட்டி ஜூனியர் என்டிஆருக்கு வந்த வாழ்வு

ஐதராபாத் : ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் 'ஜெய் லவ குசா'. 'ஜனதா கேரேஜ்' படத்துக்குப் பிறகு, ஜூனியர் என்.டி.ஆர் 'ஜெய் லவ குசா' படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தில் முதன் முறையாக நெகட்டிவ் ரோலிலும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.

கே.எஸ்.ரவீந்திரா இயக்கும் இந்தப் படம், ஜூனியர் என்.டி.ஆரின் 27-வது படம் ஆகும்.

முதலில் கமிட்டான இரண்டு ஹீரோயின்கள் :

முதலில் கமிட்டான இரண்டு ஹீரோயின்கள் :

இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ராக்ஷி கன்னா, நிவேதா தாமஸ் ஆகியோர் நடிப்பதாகத்தான் இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன.

புதிய தகவல் :

புதிய தகவல் :

தற்போது 'ஜெய் லவ குசா' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகி படம் ரிலீஸுக்குத் தயாராகிவிட்ட நிலையில், இப்படத்தில் ஐந்து நாயகிகள் நடித்திருக்கும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

புதுசா மூணு ஹீரோயின்கள் :

புதுசா மூணு ஹீரோயின்கள் :

'ஜெய் லவ குசா' படத்தில் ராக்ஷி கன்னா, நிவேதா தாமஸ் ஆகிய இருவரும் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்திருக்க, தமன்னா, நந்திதா ராஜ், ஹம்சா நந்தினி ஆகியோரும் நடித்திருக்கிறார்களாம்.

தமன்னா டான்ஸ் :

தமன்னா டான்ஸ் :

இவர்களில் தமன்னா ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு பாடலுக்கு நடனமாட, மற்ற இரண்டு நடிகைகளும் முக்கியமான ரோல்களில் நடித்திருக்கிறார்களாம்.

வாழ்றாருய்யா :

வாழ்றாருய்யா :

தெலுங்கு சினிமாவில் இப்போதைக்கு ஐந்து கதாநாயகிகளுடன் நடித்துக் கொண்டிருக்கும் ஒரே ஹீரோ இவர்தான். படம் வெளிவந்ததும் ரசிகர்கள் தொடங்கி சக நடிகர்கள் வரை பெருமூச்சு விடப் போகிறார்கள்.

English summary
'Jai Lava Kusha' is a movie starring Junior NTR. Junior NTR has starred in the film for the first time in a negative role. There are five heroines in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil