»   »  ரஜினி, கமல் வரிசையில் இணைந்த தனுஷ்

ரஜினி, கமல் வரிசையில் இணைந்த தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2.ஓ, மருதநாயகம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் வடசென்னை படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

விசாரணை படத்தைத் தொடர்ந்து தனுஷ், சமந்தாவை வைத்து வடசென்னையை வெற்றிமாறன் இயக்குகிறார்.


2 பாகங்களாகத் தயாராகும் இப்படத்தின் முதற்கட்டப் படபிடிப்பு மே முதல் தொடங்குகிறது. இந்நிலையில் வடசென்னையைத் தயாரிக்க லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.


Lyca Produce Dhanush's next Movie

இந்நிறுவனம் தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் 2.ஓ படத்தைத் தயாரித்து வருகிறது. மேலும் கமலின் மருதநாயகம் படத்தையும் லைக்கா தயாரிக்கவுள்ளது.


வடசென்னையை தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா தயாரிப்பதை அந்நிறுவனத்தின் ராஜு மகாலிங்கம் உறுதி செய்திருக்கிறார்.


இதுகுறித்து அவர் "வடசென்னையை நாங்கள் தயாரிக்கிறோம். ஆனால் கொடி படத்தை நாங்கள் வெளியிடவில்லை. தற்போது 2.ஓ, கமலின் அடுத்த படம், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, எமன் ஆகிய படங்களை நாங்கள் தயாரித்து வருகிறோம்" என்று தெரிவித்திருக்கிறார்.


வடசென்னையை லைக்கா தயாரிப்பதன் மூலம் ரஜினி, கமல் வரிசையில் தனுஷ் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Confirmed: Lyca Produce Dhanush-Vetrimaran's Vada Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil