சிம்புவின் ‘மாநாடு‘ திருவிழா ஆரம்பம்… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள படம் மாநாடு.
இத்திரைப்படம் குறித்த மிரட்டலான அறிவிப்பு தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்படத்தில், எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பாரதி ராஜா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி உள்ளிடோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகி உள்ள. அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சிலம்பரன் நடித்து வருகிறார். இப்படத்தின் வித்தியாசமான தோற்றத்தில் சிலம்பரசனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் எது சரியோ அதற்காக நில்லுங்கள், தனியாக நிற்க வேண்டியிருந்தாலும் என்ற வாசகங்களுட்ன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

முக்கிய ரோலில்
சிம்பு முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்படை தொடர்ந்து தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, பாரதி ராஜா, பிரேம்ஜி, ஒய்ஜி மகேந்திரன், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர்.

மெஹ்ரசைலா பாடல்
இப்படத்தை சுரேஷ் காமாட்சியின வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் 'மெஹ்ரசைலா' வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டிரைலர் ரிலீஸ்
மாநாடு திரைப்படம் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி படக்குழு இன்று மிரட்டலான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில், அக்டோபர் 2ஆம் தேதி 'மாநாடு'படத்தின் டிரைலர் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை சிம்புவின் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.

பல படங்களில் கமிட்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்திற்காக உடலை பாதியாக குறைத்து படு பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தையும் கைவசம் வைத்துள்ளார். மேலும் சிம்புவின் 48வது திரைபபடமான கொரேனா குமாரு திரைப்படத்திலும் கமிட்டாகி உள்ளார். சிம்பு பிஸியாக நடித்து வருவதை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கவனித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











