»   »  மீண்டும் மாதவன், பாவனா

மீண்டும் மாதவன், பாவனா

Posted By:
Subscribe to Oneindia Tamil


ஆர்யா படத்திற்குப் பின்னர் மாதவனும், பாவனாவும் மீண்டும் ஜோடி போட்டு நடிக்கவுள்ளார். சீமான் இயக்கும் இப்படத்தின் பெயர் வாழ்த்துக்கள்.

Click here for more images

மாதவன், சீமான் இருவரும் இணைந்த படம் தம்பி. அழுத்தமான சமுதாயக் கருத்துக்கள், ஆழமான வசனங்கள், அழகான கவிதை போன்ற காதலுடன் உருவான இப்படம் மிகப் பெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் மூலம் தோழமை கொண்டனர் மாதவனும், சீமானும். இந்தத் தோழமை காரணமாக மாதவனும், சீமானும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

வாழ்த்துக்கள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அப்படத்தை சீமான் இயக்கப் போகிறார். மாதவன் நாயகன். அவருக்கு ஜோடி பாவனா. ஆர்யாவுக்குப் பிறகு மாதவனுடன், பாவனா ஜோடி போடுகிறார்.

இதில் பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த விஜயலட்சுமி நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயலட்சுமி இப்படம் மூலம் பெரிய திரைக்கு வருகிறார்.

நடிகராக அறிமுகமாகி, சென்னை 600028 மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்து அசத்திய வெங்கட் பிரபுவும் இப்படத்தில் நடிக்கிறார். இளவரசுவும் படத்தில் இருக்கிறார்.

இதுவும் சமூகக் கருத்துடன் கூடிய கதைதானாம். அதேசமயம், அன்பையும், நேசிப்பையும் வலியுறுத்தும் ஆழமான கருத்துடன் கூடிய அழகான படமாக இது இருக்கும் என்கிறார் சீமான்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இனிய இசையில் உருவாகப் போகும் இப்படம் டிசம்பரில் திரைக்கு வருகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil