»   »  சிவாஜியால் மேடி படம் லேட்!

சிவாஜியால் மேடி படம் லேட்!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி சுனாமியால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் லேட்டஸ்டாக மாதவன் இணைந்துள்ளார்.

ரஜினிகாந்த்தின் சிவாஜி படத்தால் பல படங்கள் வெளி வர முடியாமல் தவித்து வந்தன. சிவாஜிக்குபயந்து பெரும்பாலான தயாரிப்பாளர்கள் படங்களை ரிலீஸ் செய்யாமல் அமைதி காத்து வந்தனர்.

அஜீத்தின் கிரீடம், விக்ரமின் பீமா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களும் இதில் அடக்கம். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி வைக்கப்பட்ட படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

முதலில் பிரவீண் காந்த் ஹீரோவாக நடித்துள்ள துள்ளல் வந்தது. பிறகு மன்சூர்அலிகானின் என்னைப் பார் யோகம் வரும் படமும் வெளியாகின. லேட்டஸ்டாக அஜீத்தின் கிரீடம் ரிலீஸ் ஆனது.

இந் நிலையில், நல்ல தியேட்டர் கிடைக்காத காரணத்தால், மாதவன்- பாவனா நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யா படம் தள்ளிப் போயுள்ளதாம். பாலசேகரன் இயக்கத்தில், மனோஜ்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இது.

ஆரம்பத்தில் நிதிப் பிரச்சினை காரணமாக படம் பாதிக்கப்பட்டது. எல்லாம் சரியாகி படத்தை எடுத்து முடித்தபோது சிவாஜி வந்து விட்டது. சரி சிவாஜி வந்து நாள் ஆகி விட்டதே இப்போது ரிலீஸ் செய்யலாம் என்றால் நல்ல தியேட்டர் கிடைக்கவில்லையாம்.

ஏற்கனவே அஜீத்துக்காக சிவாஜி திரையிடப்பட்டிருந்த சில தியேட்டர்களை காலி செய்து ஒதுக்கினர். இந்த நிலையில் மாதவன் படத்துக்கு தியேட்டர் ஒதுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாம். இதனால் ஜூலை 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த ஆர்யா தற்போது ஆகஸ்ட் 3ம் தேதிக்குத் தள்ளிப் போய் விட்டதாம்.

சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உள்ள பெரும்பாலான நல்ல தியேட்டர்களில் சிவாஜி ஓடிக் கொண்டிருக்கிறது. அவற்றில் சில தியேட்டர்களை கிரீடம் படத்துக்காக ஒதுக்கினர். ஆனால் கிரீடம் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறியதால் மறுபடியும் சிவாஜி படத்துக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனராம்.

பல இடங்களில் சிவாஜியும், கிரீடமும் ஒரே தியேட்டர் வளாகத்தில் திரையிடப்பட்டுள்ளன. ஆனால் கிரீடம் படத்தை விட சிவாஜிக்கே அதிக கூட்டம் கூடிக் கொண்டுள்ளதாம். கிரீடம் பார்க்க வருவோரில் பலர் சிவாஜிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆகஸ்ட் 2ம் தேதி சிவாஜி 50வது நாளைத் தொடுகிறது. அதன் பின்னர் சில தியேட்டர்களிலிருந்து சிவாஜி தூக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மாதவனின் ஆர்யாவுக்கு இடம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதைக் கணக்கிட்டுத்தான் ஆகஸ்ட் 3ம் தேதிக்குப் படத்தைத் தள்ளி வைத்துள்ளார் மனோஜ்குமார்.

லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமாகி அதற்குப் பிறகு பம்மிப் போன பாலசேகரன், ஆர்யாவை இயக்கியுள்ளார். ஆக்ஷன் பேக்ட் படமாம் இது. அதேசமயம் பொழுதுபோக்கு அம்சங்கள் நீக்கமற நிறைந்துள்ளதாம். மணிசர்மா இசையமைத்துள்ளார்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா இருக்கும்ல?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil