»   »  முதல் தயாரிப்பு - மாதவன் எதிர்பார்ப்பு

முதல் தயாரிப்பு - மாதவன் எதிர்பார்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil


தான் முதன் முதலாக தயாரித்துள்ள எவனோ ஒருவன் படத்தை மிகப் பிரமாண்ட வெற்றிப் படமாக்க வேண்டும் என்ற ஆவலில், எதிர்பார்ப்பில் உள்ளார் மாதவன்.

Click here for more images

மராத்தியில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற 'டோம்பிவிலி பாஸ்ட்' என்ற படத்தின் ரீமேக்தான் எவனோ ஒருவன். இப்படத்தை மாதவனே சொந்தமாக தயாரித்துள்ளார். டோம்பிவிலியை இயக்கிய நிஷிகாந்த் காமத்தே எவனோ ஒருவனையும் இயக்கியுள்ளார்.

படத்தின் முதல் காப்பியைப் பார்த்த மாதவன் அசந்து போய், படத்தின் உலகவளாவிய விநியோக உரிமையையும் வாங்கி விட்டார். இதற்காக புதிதாதக லூக்கோஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளார்.

தற்போது படத்தை உலகம் முழுவதும் சிறப்பான முறையில் திரையிட தீர்மானித்து அதற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளார்.

எவனோ ஒருவன் குறித்து மாதவன் கூறுகையில், மராத்தியில் உருவான டோம்பிவிலி பாஸ்ட் படம் 27 சர்வதேச விருதுகளையும், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது.

தமிழ் படத்தையும் அதே இயக்குநர்தான் இயக்கியுள்ளார். மராத்தியில் வெளியான படத்தை அப்படியே ரீமேக் செய்துள்ளோம். என்னைப் பொருத்தவரை நான் நடித்த படங்களிலேயே இதுதான் பெஸ்ட் என்பேன் என்றார்.

இப்படத்தில் ஸ்ரீதர் வாசுதேவன் என்ற கேரக்டரில் மாதவன் நடித்துள்ளார். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவராக இதில் வருகிறார். சஞ்சய் ஜாதவ் கேமராவைக் கையாண்டுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வசனத்தை மாதவனே எழுதியுள்ளார். இயக்குநர் சீமான், இயக்க மேற்பார்வைப் பணியை மேற்கொண்டுள்ளார்.

மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சங்கீதா. உயிர் படத்திற்குப் பிறகு அவருக்கு இதில் அட்டகாசமான கேரக்டராம். இயக்குநர் சீமானும் படத்தில் முக்கிய ரோலில் வருகிறார்.

உலகம் முழுவதும் டிசம்பர் 7ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. அதற்கு முன்பாக படத்தின் பிரீமியரை பெரிய அளவில் வெளியிட மாதவன் ஏற்பாடு செய்துள்ளார்.

அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் சில குறிப்பிட்ட நகரங்களில் படத்தைத் திரையிடவுள்ளார்.

அக்டோபர் 26ம் தேதி லாஸ் ஏஞ்சலெஸ் நகரிலும், அடுத்த நாள் நியூயார்க்கிலும், நவம்பரில் பஹ்ரைன், ஓமன், துபாய், கத்தார், அபுதாபியிலும் படத்தின் பிரிமீயருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிகளின் படக்குழுவினரும் ரசிகர்களை சந்திக்கவுள்ளனர். சில போட்டிகளும் வைக்கப்படவுள்ளன. அதில் வெற்றி பெறுவோர், படத்தின் நட்சத்திரங்களுடன் டின்னர் சாப்பிட அழைக்கப்படுவர்.

Read more about: evano oruvan madhavan production

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil