»   »  யு.எஸ்சில் மாதவன்!!

யு.எஸ்சில் மாதவன்!!

Subscribe to Oneindia Tamil


Click here for more images
எவனோ ஒருவன் படத்தின் திரையீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மனைவி சரிதா, எவனோ ஒருவன் படக் குழுவினருடன் அப்படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான மாதவன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸுக்குப் பறந்துள்ளார்.

நடிகராக மட்டுமே இதுவரை இருந்து வந்த மாதவன், முதல் முறையாக எவனோ ஒருவன் படம் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். மராத்தியில் பெரும் வெற்றி பெற்ற டோம்பிவிலி பாஸ்ட் படத்தின் ரீமேக்தான் எவனோ ஒருவன்.

டோம்பிவிலியை இயக்கிய நிஷிகாந்த்தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படத்தை பெரிய அளவில் விநியோகிக்க மாதவன் திட்டமிட்டுள்ளார். இதற்காக அமெரிக்காவிலும், கனடாவிலும் இப்படத்தைத் திரையிடுகிறார்கள்.

இதற்காக நேற்று தனது மனைவி, இயக்குநர் நிஷிகாந்த் உள்ளிட்ட படக் குழுவினருடன் மாதவன் லாஸ் ஏஞ்சலெஸ் கிளம்பிச் சென்றார். இதுதவிர கனடாவின் டோரண்டோ நகரிலும் இந்த வார இறுதியில் எவனோ ஒருவன் திரையிடப்படுகிறது.

மாதவனுக்கு ஜோடியாக உயிர் சங்கீதா நடித்துள்ளார். தீபாவளிக்கு பின்னர்தான் அதாவது டிசம்பரில்தான் இப்படத்தை திரையிடுவதாக இருந்தார் மாதவன். ஆனால் தற்ேபாது முன்கூட்டியே தீபாவளிக்குத் திரையிடுகிறார்.

இப்படம் குறித்து மாதவன் கூறுகையில், இந்தப் படத்திற்கு அனைத்துத் தரப்பினரும் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன். அதற்குத் தீபாவளிதான் சரியான நேரம். தீபாவளியை சிறப்பாக கொண்டாட இந்தப் படமும் உதவும். இப்படத்தைத் திரையிட சில பெரிய தியேட்டர்களை அணுகியுள்ளோம் என்றார்.

தமிழகத்தில் இப்படத்தை திரையிடும் உரிமையை பிரமிட் சாய்மீரா நிறுவனம் பெற்றுள்ளது.

Read more about: maddy, madhvan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil