»   »  தயாரிப்பாளரான மாதவன்!

தயாரிப்பாளரான மாதவன்!

Subscribe to Oneindia Tamil

நடிகராக அறியப்பட்டு வந்த மாதவன், தயாரிப்பாளர் கம் விநியோகஸ்தராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

மராத்தி இயக்குநர் நிஷிகாந்த் காமத் மராத்தியில் இயக்கிய டொம்பிவிலி பாஸ்ட் பெரும் வெற்றி பெற்ற படமாகும். இப்படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்துள்ளார் காமத். மாதவன்தான் நாயகன். அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் உயிர் சங்கீதா. படத்துக்கு எவனோ ஒருவன் என்று பெயரிட்டுள்ளனர்.

காமத்துக்கு டொம்பிவிலி பாஸ்ட்தான் முதல் படம். ஆனாலும் முதல் படத்திலேயே முத்திரை பதித்தார், பெரும் பாராட்டையும் பெற்றார். விருதுகளையும் அள்ளிக் குவித்தது இப்படம்.

இப்படத்தைத் தமிழில் கொண்டு வர மாதவன் விரும்பினார். காமத்தும் ரெடியாக இருந்ததால் இப்போது இப்படம் தமிழ் பேச வந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இப்படத்தின் வசனங்களை இயக்குநர் சீமானும், மாதவனும் இணைந்து எழுதியுள்ளனர். இருவரும் தம்பி படத்தில் ஏற்கனவே இணைந்துள்ளனர். ஆனால் வசனம் எழுதுவதற்காக முதல் முறையாக இணைந்துள்ளனர்.

படம் சிறப்பாக வந்திருப்பதைப் பார்த்த மாதவன், அப்படியே ஒட்டுமொத்தமாக படத்தை வாங்கி விட்டாராம். படத்தை அவர் வாங்கிட பிரமிட் சாய்மீரா நிறுவனம் உதவியுள்ளது. இதுதவிர படத்தின் விநியோக உரிமையையும் கூட வாங்கி விட்டாராம் மாதவன். படத்தை பிரமிட் சாய்மீரா மூலமாக திரையிடுகிறார் மாதவன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil