Madharaasi Box Office Prediction: அதிகரிக்கும் டிக்கெட் புக்கிங்.. மதராஸி முதல் நாள் வசூல் கணிப்பு!
சென்னை: தமிழ் சினிமாவின் அடுத்த பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கே சிறப்புக் காட்சிகள் வெளியாகின்றன. டிக்கெட் புக்கிங் அதிகரித்து வரும் நிலையில், முதல் நாள் வசூல் நல்ல ஓபனிங்கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு சல்மான்கானை வைத்து சிக்கந்தர் படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள மதராஸி படம் வெளியாகிறது. தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஏஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ருக்மணி வசந்த் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். ஹீரோயினுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஹீரோவாகவே இந்த கதை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிகரிக்கும் டிக்கெட் புக்கிங்: புக் மை ஷோவில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய செப்டம்பர் 1ம் தேதி வெறும் 16,750 டிக்கெட்டுகள் மட்டுமே புக்கிங் ஆனது. செப்டம்பர் 2ம் தேதி 29 ஆயிரம் டிக்கெட்டுகள் புக் ஆனது. செப்டம்பர் 3ம் தேதி 72 ஆயிரம் டிக்கெட்டுகள் என அதிரடியாக டிக்கெட் புக்கிங் உயர்ந்தது. இதுவரை ஒட்டுமொத்தமாக 1.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெள்ளிக்கிழமை விடுமுறை: செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் மட்டுமின்றி மிலாடி நபி என்பதால் அரசு விடுமுறை. வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் சிறப்பு காட்சிகளுக்கான தனியாக அனுமதி கேட்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கை விட ஆஃப் லைன் டிக்கெட் புக்கிங் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்: சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழ்நாட்டில் 6 முதல் 7 கோடி வரை வசூல் செய்யும் என்றும் உலகளவில் 25 கோடி முதல் 30 கோடி வரை வசூல் ஈட்ட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்தால் கண்டிப்பாக பெரிய வசூலை முதல் 3 நாட்களில் அள்ளி விடும் என்கின்றனர். ஆனால், ரிசல்ட் நெகட்டிவாக மாறினால், மிகப்பெரிய இழப்பையும் படம் சந்திக்க நேரிடும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications