Madharaasi Box Office: 100 கோடி வசூல் சாதனை படைத்த மதராஸி.. 4வது முறையாக சிவகார்த்திகேயன் ரெக்கார்டு!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் 2 நாட்களில் அதிவேகமாக 50 கோடி வசூல் சாதனையை படைத்ததாக அறிவித்த ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் அதன் பிறகு இன்று அதிகாரப்பூர்வமாக மதராஸி திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டி சாதனை கிளப்பில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரஜினிகாந்தை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படம் மிகப்பெரிய தோல்விப் படமாக மாறியது. இந்த ஆண்டு சல்மான் கானை வைத்து அவர் இயக்கிய சிக்கந்தர் படமும் அல்ட்ரா டிசாஸ்டர் ஆனது. இந்நிலையில், மதராஸி படம் சிவகார்த்திகேயனின் அட்டகாசமான அனிமல் தனமான நடிப்பு காரணமாக ரசிகர்களை கவர்ந்த நிலையில், 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

தேஜா சஜ்ஜா நடித்த மிராய் திரைப்படம் ஒரு வாரத்திலேயே 100 கோடி வசூல் சாதனை படைத்ததாக நேற்று அறிவிப்பு வெளியான நிலையில், 2 வாரங்கள் கடந்த நிலையில், மதராஸி திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டியுள்ளது.
படம் நல்லா இருக்கு: பாக்ஸ் ஆபீஸ் வசூலை தாண்டி முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜமால் மற்றும் ஷபீர் கல்லரக்கல் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படம் கமர்ஷியல் ஆக்ஷன் படமாக நல்லா இருப்பதாக பலரும் விமர்சித்தனர். சில லாஜிக் ஓட்டைகள் காரணமாக படத்திற்கு கலவையான விமர்சனங்களும் குவிந்த நிலையில், முதல் 3 நாட்களுக்குப் பிறகு படத்தின் வசூல் அப்படியே குறைந்து விட்டது.
100 கோடி வசூல்: முருகதாஸ் கம்பேக் என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை தமிழ் சினிமாவே பெரிதும் எதிர்பார்த்த நிலையில், திடீரென படத்தின் வசூல் குறைந்தது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், தொடர்ந்து சில கோடிகளை தினமும் வசூல் செய்து வந்த மதராஸி ஒருவழியாக 100 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
4வது முறை 100 கோடி கிளப்: நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தின் மூலம் முதன்முறையாக 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணைந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து டான் படத்தின் மூலம் 100 கோடி வசூல் சாதனை படைத்தார். அமரன் படம் 300 கோடி வசூல் ஈட்டிய நிலையில், மீண்டும் அவருக்கு அந்த பெருமை கிடைத்த நிலையில், தற்போது மதராஸி படத்தின் மூலம் 4வது முறையாக 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளார். அடுத்து பொங்கலுக்கு பராசக்தி படத்தின் மூலமாக மீண்டும் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் 5வது முறையாக சிவகார்த்திகேயன் இணைவார் என்றும் இதற்கு மேல் மினிமம் 100 கோடி கியாரண்டி ஹீரோவாக சிவகார்த்திகேயன் மாறிவிடுவார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











