»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Subscribe to Oneindia Tamil
பெரும்பாலும் கதாநாயகிகள்தான் வாய்ப்பு வேட்டையாடுவார்கள். ஆனால் முதல்முறையாக ஒரு நடிகரும்வாய்ப்பு வேட்டையில் இறங்கியுள்ளார். அது மாதவன்தான்.

மலையாளத்தில் பிரபலமான இயக்குநர் பாசில். பல வெற்றிப் படங்களை மலையாளத்திலும், தமிழிலும்கொடுத்தவர்.

உணர்ச்சிப்பூர்வமான க்ளைமேக்ஸை தீர்மானித்து விட்டு, அதை நோக்கி படத்தை நகர்த்துவது அவரது பாணி.இதற்கு உதராணமாக என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பூவே பூச்சூடவா, காதலுக்கு மரியாதை ஆகியபடங்களைச் சொல்லலாம். அவரது அத்தனை தமிழ் படங்களுக்கும் இளையராஜாதான் இசை.

கண்ணுக்குள் நிலவு என்ற தோல்விப்படத்திற்குப் பிறகு தமிழில் புதிய படம் எதையும் இயக்காமல் இருந்தார்பாசில். இப்போது மீண்டும் தமிழுக்கு வருகிறார். இந்த முறை இவரது நாயகனாக இருப்பவர் மாதவன். இசைவழக்கம் போல ராஜாதான்.

தனது புதிய படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை தொடர்பாக விவாதிக்க சென்னை வந்த பாசில்,இளையராஜாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்தப் படத்தில் முதலில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் மாதவன் இடையில் புகுந்து வாய்ப்பைத்தட்டிப் பறித்து விட்டார். தற்போது கருப்பன் என்ற படத்தில் மாதவன் நடித்துவருகிறார். அதோடு வெட்டிப்பயல்என்ற காமெடி படத்தில் நடிக்கவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

எதிரி படத்திற்குப் பிறகு வாய்ப்புகள் ஏதுமின்றி இருந்த மாதவனுக்கு திடீரென்று இத்தனை வாய்ப்புகள் வந்ததுஎப்படியாம்?

எதிரி படம் ரிலீஸ் ஆகி சுமாராகப் போனபோது மாதவன் தன்னை நாடி வந்த இயக்குநர்களிடம் எல்லாம் ஒருவிரலைக் காட்டினார். ஒரு விரல் என்றால் ஒரு கோடி. அதில் அரண்டு போன பல பேர் மாதவன் இருக்கும்ஏரியாவிற்கே தலை காட்டாமல் இருந்தார்கள்.

அதன்பின்பு மாதவனே வலியப் போய் வாய்ப்பு வேட்டையாடினார். அப்படிக் கிடைத்ததுதான் இந்தப் படங்கள்.இப்போது அஜீத் கைவிட்டுவிட்ட மிரட்டல் படத்தையும் வளைத்துப் போட மாதவன் பகீரத முயற்சி மேற்கொண்டுவருகிறார்.

இதற்காக நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் படத்தின் இயக்குநர்முருகதாஸ், மாதவனை வைத்து படம் பண்ண யோசிக்கிறார். காரணம் இது பக்கா ஆக்ஷன் படம். இந்தப் படத்தில்நடிக்க முதலில் விக்ரமைத்தான் முருகதாஸ் அணுகினார். ஆனால் கதையில் விக்ரம் ஏராளமான மாற்றங்களைச்செய்யச் சொன்னதால் அவரையே மாற்றி விட்டார் முருகதாஸ்.

விக்ரமை விட்டால் ஆக்ஷனுக்கு பொருத்தமானவர் அஜீத் என்று முடிவெடுத்து அவரிடம் போனார். ஆனால் அவர்தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விலகிவிட்டதால் யாரை வைத்து படம் பண்ணுவது என்றகுழப்பத்தில் இருக்கிறார்.

மாதவன் ஒரு சாக்லெட் பேபி. ஆக்ஷன் படத்தில் அவரை நடிக்கவைத்தால் அது பெரிய காமெடியாகி விடும்என்பது தான் இயக்குநரின் பயம். ஆனால் மாதவன், மணிரத்னத்தின் ஆய்த எழுத்தில் ரெளடியாக நடித்ததைவைத்து, இந்தப் படத்திலும் நான் ஏன் நடிக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் சக்கரவர்த்தியை தொடர்ந்துதொந்தரவு செய்து வருகிறார்.

வெல்லப் போவது யாரோ?


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil