»   »  சார்லி ரீமேக்கில் மாதவன்... விஜய் இயக்குகிறார்!

சார்லி ரீமேக்கில் மாதவன்... விஜய் இயக்குகிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாளத்தில் பெரும் வெற்றிப் பெற்ற சார்லி படத்தின் ரீமேக்கில் மாதவன் நடிக்கிறார்.

துல்கர் சல்மான் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் சார்லி.

Madhavan in Charlie remake

இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப் போவது உறுதி என்று பேசப்பட்டது. இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஏ எல் விஜய் இயக்குகிறார். இப்போது பிரபு தேவாவுக்காக டெவில் படத்தை இயக்கி வரும் அவர், அடுத்து ஜெயம் ரவி படத்தை முடிக்க வேண்டியுள்ளது. இந்தப் படங்கள் முடிந்ததும் சார்லி ரீமேக்கில் இறங்குகிறார்.

Madhavan in Charlie remake

படத்தின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.

நவம்பர் 15-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமோத் பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கறது.

English summary
Here is the official news, Madhavan will be reprising Dulquer Salmaan’s role in the Tamil remake of Malayalam hit Charlie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil