»   »  ”தனி ஒருவன்” இந்தி ரீமேக்கில் நான் நடிக்கவில்லை- நடிகர் மாதவன் விளக்கம்!

”தனி ஒருவன்” இந்தி ரீமேக்கில் நான் நடிக்கவில்லை- நடிகர் மாதவன் விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தமிழில் வெளியாகி சக்கை போடு போட்ட தனி ஒருவன் இந்தி ரீமேக்கில் தான் நடிப்பதாக வெளிவந்த செய்தியை மறுத்துள்ளார் நடிகர் மாதவன்.

ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து கடந்த மாதம் வெளியான "தனி ஒருவன்" திரைப்படம் தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கிய நடிகர் அரவிந்த் சாமியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

Madhavan denies doing 'Thani Oruvan' remake

இந்தப் படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், இந்தி பதிப்பில் ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் சல்மான் கானும், அரவிந்த் சாமி ஏற்றிருந்த வில்லன் கதாபாத்திரத்தில் மாதவனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன.

இந்நிலையில், எந்த மொழியிலும், எந்தப் புதிய படத்திலும் நடிக்க நான் ஒப்புக்கொள்ளவும் இல்லை. ஒப்பந்தத்தில் கையொப்பமிடவும் இல்லை என மாதவன் இன்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மாதவன், இப்போது எனது சினிமா வாழ்க்கை "இறுதிச்சுற்று" மற்றும் "சாலா காடூஸ்" படங்களைச் சுற்றி மட்டுமே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

English summary
Actor R. Madhavan has denied reports that he will play the negative role in the remake of Tamil blockbuster Thani Oruvan. He says he has not 'signed or approved' any other film apart from forthcoming bilingual sport drama Saala Khadoos.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil