»   »  இறுதிச்சுற்று படப்பிடிப்பில் நிஜக் குடிகாரராக மாறிய மாதவன்- வீடியோ உங்களுக்காக!

இறுதிச்சுற்று படப்பிடிப்பில் நிஜக் குடிகாரராக மாறிய மாதவன்- வீடியோ உங்களுக்காக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறுதிச்சுற்று படப்பிடிப்பின்போது நிஜமாகவே குடித்து விட்டு உண்மையாக அலப்பறை கொடுத்திருக்கிறார் நடிகர் மாதவன்.

Select City
Buy Irudhi Suttru (U) Tickets

சுதா இயக்கத்தில் மாதவன், நாசர், ரித்திகா சிங் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இறுதிச்சுற்று. தமிழ், இந்தி என்று 2 மொழிகளில் வெளியாகும் இந்தப் படம் வருகின்ற 29 ம் தேதி திரைக்கு வருகிறது.இதில் மாதவன் குடிப்பது போன்று ஒரு காட்சியை இயக்குநர் படமாக்கியிருக்கிறார். நாசருடன் இணைந்து அந்தக் காட்சியில் நடித்த மாதவன் குடிகாரனாக நடிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.


இதனால் உண்மையாக குடித்து விட்டு நடிக்கலாம் என்று எண்ணி சிறிது குடிக்க, ஒரு கட்டத்தில் மாதவன் அளவுக்கு அதிகமாக மதுவை குடித்து விட்டார்.


மாதவன் குடித்து விட்டு செய்த அலப்பறைகளை படக்குழுவினர் தற்போது வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றனர்.அதில் நாசரை நடிப்பது, இயக்குநரை கிண்டல் செய்வது என்று நிஜக் குடிகாரர்களை மிஞ்சியிருக்கிறார் மேடி.


அந்த வீடியோவில் மாதவன் கூறும்போது "நான் இதனை தவறான அனுபவமாக கருதுகிறேன், குடிப்பது உண்மையிலேயே தவறான செயல்" என்று கூறியிருக்கிறார்.


சின்ஸியரா நடிக்கறது தப்பில்லை தான் அதுக்காக இப்படியா!

English summary
Irudhi Suttru Team Now Released Madhavan's Real Drink Experience Video. Meet The Drunken Khadoos! Watch R Madhavan get into the skin of his in this Saala Khadoos behind the scenes video.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil