தனியே தனந்தனியே...தனி ஒருவனாக விமானத்தில் பறந்த மாதவன்

சென்னை : கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு இந்தியாவில் மீண்டும் விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் புது விதமான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளால் விமான பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது புதுப்புது அனுபவங்களை வழங்கி வருகிறது.

அப்படி கொரோனா காலத்தில் விமானத்தில் தனி ஒருவனாக பறந்துள்ளார் நடிகர் மாதவன். விமானத்தில் அவர் ஒருவர் மட்டும் தனியாக பறந்த திகில் அனுபவத்தை சோஷியல் மீடியாவில் வீடியோவாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் மாதவன்.

தனி ஒருவனாக சென்ற மாதவன்

தனி ஒருவனாக சென்ற மாதவன்

அவர் தனது பதிவில், அது ஜுலை 26. ஏர் இந்தியா விமானத்தில் நான் மட்டும் தான் பயணி என சிரித்தபடி தனது அனுபவத்தை சொல்ல துவங்குகிறார் மாதவன். தொடர்ந்து அவர் பேசுகையில், இது மிகவும் அரிதான வாய்ப்பு. இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு கொரோனாவிற்கு தான் நன்றி சொல்லனும்.

கடவுளிடம் வேண்டுவோம்

கடவுளிடம் வேண்டுவோம்

இந்த வீடியோவுடன் மாதவன் பதிவிட்டுள்ள கேப்ஷனில், திகிலாக இருக்கு. இருந்தாலும் கவலையாக இருக்கு. விரைவில் இந்த நிலை மாற தீவிரமாக கடவுளகடம் பிரார்த்தனை செய்வோம். அப்போது தான் பிரியாமான உறவுகளுடன் ஒன்றாக இணைந்து இருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

தனியாக பறந்த அனுபவம்

தனியாக பறந்த அனுபவம்

விமானத்தில் தனியாக பயணம் செய்தது மட்டுமல்ல விமான நிலையத்தில் தனி ஒருவனாக வந்திறங்கியது போன்ற அனுபவங்களையும் வீடியோக்களாக பகிர்ந்துள்ளார் மாதவன். மாதவன் முதல் முறையாக அவரே இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் என்ற படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

3 மொழிகளில் நம்பி எஃபெக்ட்

3 மொழிகளில் நம்பி எஃபெக்ட்

மூன்று மொழிகளில் தயாராகி உள்ள ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படம் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை சம்பவங்களை மையமாகக் கொண்டது. இந்த படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். பார்த்தாலே பரவசம் படத்திற்கு பிறகு மாதவனுடன் சிம்ரன் இணைந்து நடித்துள்ள படம் இது.

மாதவனை பாராட்டிய பிரதமர்

மாதவனை பாராட்டிய பிரதமர்

இந்த படம் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு பிரத்யேகமாக போட்டு காண்பிக்கப்பட்டது. இதை பார்த்து விட்டு மாதவனுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த பிரதமர், நம்பி நாராயணனிடம் வருத்தம் தெரிவித்தார். இந்த சந்திப்பு தொடர்பான ஃபோட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X