»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழில் அதிகம் வாய்ப்பில்லாத நிலையில் நடிகர் மாதவன் மலையாளக் கரையோரம் ஒதுங்கியிருக்கிறார்.

இந்தி டெலிவிஷன் தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த மாதவனை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தவர்இயக்குனர் மணிரத்னம். பெரும்பாலும் மணிரத்னம் ஒரு ஹீரோவை வைத்து இரண்டு படங்களுக்கு மேல்பண்ணியதில்லை. ஆனால் மாதவனின் நடிப்பைப் பார்த்து, அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்தஎழுத்து என தொடர்ச்சியாக 3 படங்களில் நடிக்க வாய்ப்பளித்தார்.

மணிரத்னம் மட்டுமல்ல, கமலும் மாதவனின் ரசிகர்தான். அன்பே சிவம் படத்தில் மாதவனின் ஈடுபாட்டானநடிப்பை ரசித்த கமல், தனது சொந்த தயாரிப்பான நளதமயந்தியில் ஹீரோவாக்கினார்.

காதல் மற்றும் நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்த மாதவன், ஆய்த எழுத்து படத்தில் தனக்குஆக்ஷனும் வரும் என்று நிரூபித்தார். இத்தனை திறமை இருந்தும் மாதவனுக்கு இப்போது வாய்ப்புகள் அதிகம்இல்லை.

விரும்புகிறேன், பைவ் ஸ்டார் ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சுசி.கணேசன் இயக்கத்தில் கருப்பன்என்ற ஒரு படம் மட்டுமே தற்போது கைவசம் உள்ளது.

இதேபோன்ற நிலை நடிகைகளுக்கு ஏற்பட்டால், கவர்ச்சியாக ஸ்டில்ஸ் எடுத்து, தயாரிப்பாளர்களுக்குஅனுப்பிவிட்டு, எப்படியும் நடிக்க ரெடி என்று ஸ்டேட்மெண்ட் விடுவார்கள்.

நடிகர்கள் சொந்த துட்டைப் போட்டு, ஒரு படத்தை இயக்கி நடித்து கைக்காசை இழப்பார்கள். ஆனால் உஷார்பார்ட்டியான மாதவன் இந்தியில் சில துக்கடா ரோல்களை செய்து கொண்டே மலையாளத்தில் கிடைத்த ஒருவாய்ப்பைப் பிடித்துக் கொண்டு கேரளப் பக்கம போயிருக்கிறார்.

மலையாள இயக்குனர் ராஜீவ் அஞ்சல் இயக்கத்தில் மேட் இன் யுஎஸ்ஏ என்ற படத்தில் நடிக்கத்தான் மாதவன்திருவனந்தபுரம் போயிருக்கிறார். மலையாளத்தில் இது தான் மாதவனுக்கு முதல் படம். படத்தில் அவருக்கு ஜோடிநடிகை காவேரி.

இந்தப் படம் ஆங்கிலம், மலையாளத்தில் ஒரே நேரத்தில் உருவாகிறதாம். யுஎஸ்சிலும் கேரளத்திலும்சூட்டிங்.

இப் படத் துவக்க விழாவில் மாதவன் நிருபர்களிடம் பேசுகையில்,

சினிமா நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை. ஒருசைக்கிளை எடுத்துக் கொண்டு ஒரு பத்திரிக்கை வாங்க சென்றால், நான் கொல்லப்படக்கூடும். எனவே பாதுகாப்புகருதியே பெரும்பாலான நடிகர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் ஆடம்பரமாக வாழ வேண்டியிருக்கிறது.

மேலும் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தில் 40 சதவீதம் வருமானவரியாகப் போய் விடுகிறது. வறுமை கோட்டிற்குகீழே கோடிக்கணக்கான மக்கள் வாழும் நமது நாட்டில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளத்தைப் பற்றி பேசுவதுவெட்கக்கேடானதுதான் என்றாலும், நடிகர்களுக்கு பென்ஷனோ அல்லது வருங்கால பாதுகாப்புக்கானஉத்தரவாதமோ இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil