»   »  சூப்பர் ஸ்டாருக்கு 'மகிழ்ச்சி'னா, எஸ்.டி.ஆருக்கு 'சிறப்பு'

சூப்பர் ஸ்டாருக்கு 'மகிழ்ச்சி'னா, எஸ்.டி.ஆருக்கு 'சிறப்பு'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தில் ரஜினி மகிழ்ச்சி என்று கூறுவது போன்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு சிறப்பு என்ற வார்த்தையை பயன்படுத்துகிறாராம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மூன்று வேடங்களில் வருகிறார் சிம்பு. அதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார்.

Magizhchi for Kabali, Sirappu for Simbu

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கபாலி படத்தில் ரஜினி மகிழ்ச்சி என்ற வார்த்தையை சில முறை பயன்படுத்தினார். அதே போன்று அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்பு சிறப்பு என்ற வார்த்தையை பலமுறை பல வகையாக கூறுவார் என்று ஆதிக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆதிக் மேலும் கூறுகையில்,

சிம்பு ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் சிறப்பு என்று சொல்வது ரசிகர்களை நிச்சயம் கவரும். படத்தில் ஷாக் முருகன் என்ற சிறிய கதாபாத்திரத்தில் ஒய். ஜி. மகேந்திரன் நடிக்கிறார். அவருக்கு காமெடி கதாபாத்திரம் என்றார்.

English summary
Just as Rajini says Magizhchi in Kabali, Simbu will be seen saying Sirappu in Anbanavan Asaradhavan Adangadhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil