»   »  மறுபடியும் தமிழில் மகேஷ்பாபு

மறுபடியும் தமிழில் மகேஷ்பாபு

Subscribe to Oneindia Tamil


நந்து (தெலுங்கில் வெளியான அத்தடு) படம் மூலம் தமிழுக்கு வந்த தெலுங்கு இளம் நாயகன் மகேஷ் பாபு, மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். அவரும், திரிஷாவும் இணைந்து மிரட்டிய சைனிக்குடு தமிழ் பேச வந்துள்ளது.

Click here for more images

கில்லி, போக்கிரி ஆகிய படங்கள் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவை. தெலுங்கைப் போலவே, தமிழிலும் இப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால், சில தெலுங்குப் பட நாயகர்களுக்கு தங்களது படங்களை தமிழில் டப் செய்ய ஆசை பிறந்தது.

அவர்களில் ஒருவர்தான் மகேஷ்பாபு. தெலுங்கைக் கலக்கிக் கொண்டிருக்கும் இளம் நாயகனான மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த அத்தடு படம், தமிழில் நந்து பெயரில் டப் ஆகி வெற்றியும் பெற்றது. இதில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் திரிஷா.

இப்போது மகேஷ்பாபு, திரிஷா நடித்த சைனிக்குடு படத்தையும் தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள். இப்படத்தை தமிழ்நாட்டுக்காரரான குணசேகரன்தான் இயக்கியிருந்தார்.

திரிஷா, மகேஷ்பாபுவுடன் இப்படத்தில் 3வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். படம் முழுக்க கவர்ச்சியில் விளையாடியிருக்கிறாராம் திரிஷா.

தமிழில் இப்படத்துக்கு குமரன் என பெயரிட்டுள்ளனர். ரவிசங்கர் வசனம் எழுதியுள்ளார். நா. முத்துக்குமார், சினேகன், விவேகா ஆகியோர் பாடல்களைப் புனைய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

சைனிக்குடு படத்தின் ரீமேக் உரிமையை வாங்க பல தமிழ் படத் தயாரிப்பாளர்கள் முயன்றனர். ஆனால் இப்படத்தை நேரடியாக தமிழில் டப் செய்து வெளியிடலாம் என மகேஷ்பாபு சொன்னதால் ரீமேக் ரைட்ஸை தர மறுத்து விட்டார்களாம் தயாரிப்பாளர்கள்.

சென்னையில் நான்கு தியேட்டர்களிலும் மற்றும் தமிழகம் எங்கும் அக்டோபர் 5ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

கலக்குப்பா, குமரா!

Read more about: gilli, maheshbabu, nandu, trisha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil