»   »  கோலிவுட் வந்ததும் விஜய்க்கு நேர் மாறாக செய்யும் மகேஷ் பாபு

கோலிவுட் வந்ததும் விஜய்க்கு நேர் மாறாக செய்யும் மகேஷ் பாபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதன் முதலாக நேரடி தமிழ் படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு தனது ரசிகர்களை நேரில் வரவழைத்து பேசுகிறாராம்.

தெலுங்கில் முன்னணி ஹீரோவான மகேஷ் பாபு தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் முதன்முறையாக நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் சென்னையில் முகாமிட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.

மகேஷ் பாபு

மகேஷ் பாபு

மகேஷ் பாபு இதுவரை தமிழ் படத்தில் நடிக்காவிட்டாலும் அவருடைய தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. அவருடைய பல தெலுங்கு படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்துள்ளார்.

முருகதாஸ்

முருகதாஸ்

முருகதாஸும் அஜீத் அல்லது விஜய்யை வைத்து படம் எடுத்துவிடலாம் என்று ஒரு முடிவில் இருந்தார். ஆனால் இருவரின் கால்ஷீட்டும் அவருக்கு கிடைக்கவில்லை.

அஜீத், விஜய்

அஜீத், விஜய்

முருகதாஸும் அஜீத், விஜய்யை இயக்க ஆசைப்படுவதை வாய்விட்டு கூறியும் அவர்கள் இருவருமே கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம் உள்ளதாம். இந்நிலையில் தான் முருகதாஸ் டோலிவுட்டில் இருந்து மகேஷ் பாபுவை அழைத்து வந்து படம் இயக்கி வருகிறார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

முருகதாஸ் படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமாக நினைக்கிறார் மகேஷ் பாபு. அவருக்கு ஏற்கனவே தமிழகத்தில் ஏராளமான ரசிகைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் சென்னை ரசிகர்களை அடிக்கடி வரவழைத்து பேசி இன்ப அதிர்ச்சி கொடுக்கிறாராம். ரசிகர்கள் கூட்டம் கூடினால் அந்த படப்பிடிப்பை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கூறி விஜய் கிளம்பிவிடும் நிலையில் மகேஷோ ரசிகர்களை வரவழைத்து பேசுகிறார்.

English summary
Mahesh Babu who is acting for the first time in a tamil movie is impressing the fans in TN by meeting them frequently.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil