Don't Miss!
- Lifestyle
இந்த ஈஸியான விசித்திர வழிகள் நீங்க நினைப்பதை விட எடையை வேகமாக குறைக்குமாம்... கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!
- Technology
முதல் 5ஜி வீடியோ கால்: சென்னை ஐஐடியில் வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்தார் அமைச்சர் அஷ்வினி வைனவ்! வீடியோ.!
- News
ஆமா.. அண்ணாமலை இந்த விஷயம் பற்றி மட்டும் பேசுவதில்லை பார்த்தீங்களா? பாயிண்டுக்கு வந்த கொங்கு ஈஸ்வரன்
- Sports
மும்பை - சிஎஸ்கேவுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. ப்ளே ஆஃப்-ல் இப்படி ஒரு விஷயமா..?? சிக்கிய மற்ற அணிகள்!
- Finance
ரூ.1100 கோடிக்கு ஏலம் போன கார்.. என்ன ஸ்பெஷல்!
- Automobiles
மாருதி வேகன்ஆர் காரில் வலம் வந்த கிரிக்கெட் வீரர்... இப்ப அவரு வாங்கியிருக்க கார பாத்தீங்களா? மெர்சலா இருக்கு!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அப்பாவின் பயோ பிக்கில் நடிக்க மறுக்கும் மகேஷ் பாபு...காரணம் இது தானா?
ஐதராபாத் : தனது அப்பாவின் பயோபிக்கில் தான் நடிக்க மாட்டேன் என்றும், அதே சமயம் அதை சினிமாவாக தயாரிக்க தான் தயாராக உள்ளதாகவும் மகேஷ் பாபு சொல்லி உள்ளார். இதற்கு என்ன காரணம் என தெரிந்ததும் பலரும், அடடே என ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் மகேஷ்பாபு, தற்போது கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீசாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரொமான்டிக் காமெடி தில்லர் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகேஷ் பாபுவின் பாலிவுட் பஞ்சாயத்து.. இத்தனை பிரபலங்கள் என்ன சொல்லி விளாசியிருக்காங்கன்னு பாருங்க!

அய்யய்யோ நான் நடிக்க மாட்டேன்
சர்காரு வாரி பாட்டா படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் மகேஷ் பாபு, பல மீடியாக்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருந்து வருகிறார். அப்படி பேட்டி ஒன்றில் மகேஷ் பாபுவிடம், உங்கள் அப்பாவின் வாழ்க்கை பயோபிக்காக எடுக்கப்பட்டால் அதில் நீங்க நடிப்பீர்களா என கேட்கப்பட்டது. இதற்கு நடிக்க மாட்டேன் என சட்டென மறுப்பு கூறி விட்டார் மகேஷ்பாபு.

அப்பாவின் ரெஃபரன்ஸ்
மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா, தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக இருந்தவர். மகேஷ்பாபும் அவரும் இணைந்து சில படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். மகேஷ்பாபுவின் சில படங்களில் அவரது அப்பாவின் ரெஃபரன்ஸ் இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். கிருஷ்ணா நடித்த அல்லூரி சீத்தாராமராஜு படத்தின் ரெஃபரன்ஸ் மகேஷ்பாபு நடித்த சரிலேரு நீக்கிவாரு படத்தில் பார்க்க முடியும்.

இப்படி சொல்லிட்டாரே
இதனால் அவர் அப்பாவின் பயோபிக்கிலும் மகேஷ்பாபு நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஹீரோவின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட உள்ளது இதுவே முதல் முறையாகும். இதனால் மகேஷ் பாபு இதில் நடிக்க ஆர்வம் காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் நடிக்க மகேஷ் பாபு நோ சொல்லி இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.

இது தான் காரணமா
இதற்கு காரணம் என்ன என்று மகேஷ்பாபுவிடமே விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், என்னை பொறுத்தவரை எனக்கு என் அப்பா தெய்வம் மாதிரி. அதனால் அவரின் பயோபிக்கில் நான் நடிக்க போறதில்லை. அதில் நடிப்பதை விட அதை தயாரிக்கவே நான் மிகவும் விரும்புகிறேன். சரியான திரைக்கதையாக அமைக்கப்பட்டால் அந்த படத்தை நானே தயாரிக்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.