»   »  அனுஷ்காவிற்கு காத்திருக்கும் மகேஷ் பாபு

அனுஷ்காவிற்கு காத்திருக்கும் மகேஷ் பாபு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டார் , இளவரசன் என்று வர்ணிக்கப் படும் மகேஷ் பாபுவின் புதிய படமான ஸ்ரீமந்துடு படம் அனுஷ்காவின் நடிப்பில் வெளியாகும் பாகுபாலி படத்தின் ரிலீசால் தள்ளித் தள்ளி செல்கிறது.

தெலுங்கு பட உலகம் மட்டுமல்லாது இந்திய திரை உலகமே பாகுபாலி படத்தின் வெளியீடை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளது.

சரித்திரம் கலந்த வரலாற்றுப் படமாக எடுக்கப் படும் பாகு பாலி படம் மும்மொழிகளிலும் வெளியாக உள்ளதால் இதன் ரிலிஸ் தேதி மாறிக் கொண்டே செல்கிறது.

மகேஷ் பாபு:

மகேஷ் பாபு:

தூக்குடு,ஆகடு, ஒக்கடு என்று வரிசையாக ஹிட் அடித்த இவர் படங்கள் இவரை தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டாராக சிம்மாசனமிட்டு அமர வைத்தது.

போக்கிரி: தமிழில் நம்ம விஜய் நடித்து மெஹா ஹிட்டடித்த போக்கிரி படம் மகேஷ் பாபு நடித்த தெலுங்கு போக்கிரியின் ரீமேக் தான்.

தள்ளிப் போகும் ஸ்ரீமந்துடு:

தள்ளிப் போகும் ஸ்ரீமந்துடு:

தெலுங்கு பட உலகின் இளவரசன் மகேஷ் பாபு நடிப்பில் ஸ்ரீமந்துடு படம் கோடை கொண்டாட்டமாக மே மாதம் வர இருந்தது பாகுபாலி பட அறிவிப்பால் இப்பொழுது ஆகஸ்ட் மாதம் வரை தள்ளி வைக்கப் பட்டுள்ளது.

காரணம் என்ன:

காரணம் என்ன:

படம் வெற்றி பெறும் என்று படக் குழு நம்பினாலும் பாகுபாலி படத்துடன் வெளியானால் வசூலில் குறைந்து விடும் என்பதால் படத்தை பாதுகாப்பானவளையத்தினுள் கொண்டு வந்து உள்ளனர்.

ஜோடி சுருதி:

ஜோடி சுருதி:

கோரடல சிவா இயக்கத்தில் வெளிவர இருக்கும் இப்படத்தில் மகேஷின் ஜோடி நம்ம சுருதி ஹாசன் இசை தேவி ஸ்ரீ பிரசாத்.

பாகுபாலிய சீக்கிரமா ரிலிஸ் பண்ணுங்கப்பா பாவம் நம்ம மகேஷ் பாபு...

English summary
Mahesh Babu New Movie Srimanthdu Release Date Is Not Confirmed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil