»   »  பாலிவுட்டின் "வடா பாவ்" ஆக தயாராகும் கோழிக்கோட்டின் "சுலைமானி"!

பாலிவுட்டின் "வடா பாவ்" ஆக தயாராகும் கோழிக்கோட்டின் "சுலைமானி"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தமிழ், மலையாளத் திரை உலகங்கள் பாலிவுட்டுக்குப் பல நடிகர், நடிகைகளைத் தாரை வார்த்துள்ளன. அவர்களில் மிகச் சிலர் மட்டுமே பாலிவுட்டிலும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சமீபத்தில் பிருத்விராஜ், ராம்சரண், சித்தார்த், மாதவன், தனுஷ் என இந்தி திரையுலகில் அறிமுகமான இந்த வரிசையில் இப்போது புதிய வரவாக மலையாள நடிகரும், மம்முட்டியின் மகனுமான துல்கர் சல்மான் பாலிவுட்டுக்குள் கால் வைக்க இருக்கிறார்.

இவர் அறிமுகமாகும் இந்தத் திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகரான இர்ஃபான் கான் மற்றும் கதாநாயகியாக மிதிலா பல்கார் எனும் புதுமுக நடிகையும் நடிக்கிறார்களாம். இந்தப் படத்தை நடிகரும், இயக்குநருமான ஆகாஷ் குரானா இயக்கவிருக்கிறார். துல்கர் சல்மான் நடித்த 'சார்லி', பெங்களுர் டேஸ்', 'கம்மட்டிபாடம்' ஆகிய படங்களில் அவரது தேர்ந்த நடிப்பைப் பார்த்துத்தான் அவரைத் தேர்வு செய்ததாகக் கூறியிருக்கிறார் ஆகாஷ் குரானா. இந்தப் படத்தைத் யூ டிவி நிறுவனம் தயாரிக்கிறது.

Malayalam actor Dulquer salman is all set to make bollywood debut

இந்தப் படத்தில், துல்கர் சல்மான் ஒரு பயண விரும்பியாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. வெவ்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள் வாழ்வின் ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றாகச் சந்திப்பதைப் பற்றிய படமாக இருக்குமாம். அப்படியானால், இந்தப் படம் 'தில் சாஹ்தா ஹை' போல ருசியான பயண அனுபவத்தைப் பற்றியதாக இருக்குமா அல்லது, 'ஜிந்தகி நா மிலேகி டோபரா' போல முரட்டுத்தனமான சாகசப் பயணமாக இருக்குமா என இப்போதே பாலிவுட் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறுகிறதாம்.

துல்கர் சல்மான் கார் மற்றும் பைக் பிரியர் என்பதால் இந்தப் படம் செம மாஸாக வரவும் வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறுகின்றனர். துல்கருக்கு சினிமாவிலும், இன்ஸ்டாகிராமிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். பெண் ரசிகைகளின் மனங்கவர்ந்த சாக்லேட் பாய் துல்கருக்கு பாலிவுட் ரசிகைகள் மத்தியில் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

ஃபகத் ஃபாசில், நிவின் பாலி போன்று துல்கரும் மலையாளத்தில் நகரத்து இளைஞராக நடிக்கத் தொடங்கியவர்தான். பாலிவுட் இயக்குநர்களால் இவரது திறமையை முழுமையாகப் பெற முடிந்தால் தமிழ், மலையாள சினிமா ரசிகர்களும் துல்கரின் பாலிவுட் அறிமுகத்துக்கு விசில் அடிப்பார்கள். இந்த நகரத்து இளைஞர் முகம் பாலிவுட்டுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஆக, கோழிக்கோட்டின் சுலைமானி, பாலிவுட்டின் வடா பாவ் ஆகத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

English summary
Malayalam actor Dulquer salman is all set to make his bollywood debut soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil