»   »  மோகன்லாலுக்கு பெயிண்டிங், துல்கருக்கு ரேசிங், ஜெயராமுக்கு மிமிக்ரி: ஒரு சுவராஸ்ய ரிப்போர்ட்

மோகன்லாலுக்கு பெயிண்டிங், துல்கருக்கு ரேசிங், ஜெயராமுக்கு மிமிக்ரி: ஒரு சுவராஸ்ய ரிப்போர்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: அஜீத் குமாரை போன்று நடிகர் துல்கர் சல்மானுக்கும் கார், பைக் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

மலையாள திரை உலகில் முன்னணி நடிகர்களாக பல காலம் இருப்பவர்கள் மோகன்லாலும், மம்மூட்டியும். வயதாகிவிட்டாலும் திரை உலகில் அவர்களுக்கான மவுசு மட்டும் குறையவில்லை. மம்மூட்டி ஹீரோவாக நடிக்கிறார். அவரது மகன் துல்கர் சல்மானும் தந்தை வழியில் ஹீரோவாகிவிட்டார்.

இந்நிலையில் மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களுக்கு பிடித்த சில விஷயங்கள் பற்றி தெரிய வந்துள்ளது.

மம்மூட்டி

மம்மூட்டி

மம்மூட்டிக்கு காலத்திற்கேற்ப மாறும் தொழில்நுட்பங்கள் பிடிக்கும். மலையாள திரை உலகில் டிஜிட்டல் கேமரா வாங்கிய முதல் ஆள் அவர் தானாம். அவருக்கு புகைப்படம் எடுப்பது, வகை வகையான கார்களை வாங்குவது பிடிக்கும்.

மோகன்லால்

மோகன்லால்

மோகன்லால் நடிப்பதில் மட்டும் வல்லவர் அல்ல. நன்றாக ஓவியமும் வரைவார். ஜில்லா படத்தில் நடிக்கையில் விஜய்யின் ஆளுயர படத்தை வரைந்து அவருக்கு பரிசாக அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மோகன்லாலுக்கு கைவினைப் பொருட்கள், பெயிண்டிங்குகளை வாங்கி சேகரிப்பது பிடிக்கும். அவருக்கு மேடை நாடகங்கள் என்றாலும் உயிர்.

ஜெயராம்

ஜெயராம்

உலக நாயகன் கமல் ஹாஸனின் நெருங்கிய நண்பரான நடிகர் ஜெயராம் பல குரல்களில் பேசுவதில் மன்னன். மேடை நிகழ்ச்சிகளில் கூட அவர் பல குரல்களில் பேசி வருகிறார். இது தவிர அவர் செண்டை மேளம் வாசிப்பதிலும் வல்லவர்.

சுரேஷ் கோபி

சுரேஷ் கோபி

தீனா படத்தில் அஜீத்தின் அண்ணனாக நடித்த சுரேஷ் கோபிக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். அவர் நடிப்பதோடு அருமையாக பாடவும் செய்வார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பாடியுள்ளார்.

திலீப்

திலீப்

நடிகர் திலீப்புக்கு வியாபாரம் செய்வது பிடிக்கும். அவர் தயாரிப்பு நிறுவனம், தியேட்டர் காம்பிளக்ஸ் மற்றும் உணவகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

ப்ரித்விராஜ்

ப்ரித்விராஜ்

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் ப்ரித்விராஜுக்கு பயணம் செய்வது பிடிக்கும். அவர் நேரம் கிடைக்கும் போது எல்லாம் எங்காவது பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ஃபஹத் பாசில்

ஃபஹத் பாசில்

மலையாள நடிகரும், நஸ்ரியாவின் கணவருமான ஃபஹத் பாசிலுக்கு புத்தகங்கள் வாசிக்க பிடிக்கும். அவர் எப்பொழுது பார்த்தாலும் புத்தகமும், கையுமாக இருப்பது அவரது குடும்பத்தாரை எரிச்சல் அடைய வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

துல்கர் சல்மானுக்கு கார், பைக் ரேஸ் என்றால் பிடிக்கும். கார், பைக்கில் வேகமாக செல்வதும் அவருக்கு இஷ்டம். ரேஸர் ஆக விரும்பிய அவர் அது குடும்பத்தாருக்கு பிடிக்காததால் தனது ஆசையை கைவிட்டுவிட்டார்.

English summary
Most of the Malayalam actors are famous for their hidden passions. Above are the hidden passions of some of the leading Malayalam actors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil