அப்பாவை பறிகொடுத்தும் ஷைன் டாம் சாகோ திருந்தலயா.. மலையாள ரசிகர்கள் வறுத்தெடுக்க காரணம் அதுவா?
கொச்சி: நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சி.பி. சாக்கோவின் மரணம், ஷைன் வாழ்க்கையில் ஒரு சோகமான அத்தியாயமாக அமைந்தது. ஜூன் 6 அன்று நடந்த இந்த விபத்தில், ஷைனுடன் இருந்த அவரது சகோதரர் மற்றும் தாயார் காயங்களுடன் உயிர் தப்பினர். ஷைனைத் தேற்றுவதற்காக அவரது நண்பர்களும் சக ஊழியர்களும் உடன் இருந்தனர்.
முன்னதாக, போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ஷைன் டாம் சாக்கோ பலமுறை சிக்கியுள்ளார். தொடர்ச்சியான வழக்குகளுக்குப் பிறகு, அவர் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றார். இதனால் ஷைன் தனது போதை பழக்கத்திலிருந்து மீண்டு வருவதாக சி.பி. சாக்கோ மகிழ்ந்தார். தனது கடந்தகால தவறுகளைப் பற்றி ஷைன் வெளிப்படையாக பேசியதுடன், போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்த முடிவு செய்ததாகக் கூறியிருந்தார்.
தற்போது, ஷைன் ஓணம் கொண்டாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியில் ஷைன் பேசும் விதம், முன்பு அவர் போதையில் இருந்தபோது எப்படி பேசுவாரோ அதுபோல இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தந்தையின் மரணத்திற்குப் பிறகும் ஷைன் மீண்டும் தவறான பாதைக்குத் திரும்பினாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கோகோயின் வழக்கு: தந்தையின் விருப்பத்தைக் கருத்தில்கொண்டு ஷைன் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பாமல் இருந்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஷைன் திருந்தமாட்டார் என்று குறை சொல்பவர்களும் உண்டு. மேலும், அவர் பொது இடங்களில் விசித்திரமாக நடந்துகொள்ளக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது. தந்தை இறப்பதற்கு முன் ஒரு நேர்காணலில், ஷைன் தனது குடும்பத்தினரை இனிமேல் வருத்தப்பட வைக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். "2015-ல் என்மீது கோகோயின் வழக்கு வந்தபோது, அப்பா அழுததை நான் முதன்முதலில் பார்த்தேன். அம்மாவும் அப்பாவும் என் பின்னால் ஓடியதை ஊடகங்களில் பார்த்தேன். இப்போது அவர்களுக்கு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இவர்களை இனி கஷ்டப்படுத்த மாட்டேன்," என்று அவர் தெரிவித்தார்.
ஷைன் டாம் சாகோ விளக்கம்: மேலும், "எனக்கு போதையிலிருந்து மகிழ்ச்சி கிடைக்கிறது. ஆனால், அந்த மகிழ்ச்சி மற்றவர்களுக்கு எந்த மன அமைதியையும் தருவதில்லை என்பதை உணர்ந்தேன். அவர்கள் பதட்டத்திலிருந்து மேலும் பதட்டத்திற்குச் செல்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பற்றதாகிறது. எனக்காக இந்த பழக்கங்களை விட முடியாது. அவர்களுக்காகத்தான் என்னால் விட முடியும். இனி எதுவும் வேண்டாம் என்று தோன்றியதற்குக் காரணம் அதுதான்," என்று ஷைன் கூறினார். ஷைனின் இந்த மாற்றம் திரையுலகத்தினரையும் சக ஊழியர்களையும் மகிழ்ச்சியடைய வைத்திருந்தது.
ரசிகர்கள் ரிஷயக்ஷன்: இப்படி இருக்கும்போது ஓணம் கொண்டாட்டம் தொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் ஷைன் டாம் சாகோ மீண்டும் போதையின் பாதைக்கே சென்று விட்டாரா? அவரது அப்பா இறந்து சில மாதங்கள் கூட ஆகவில்லை. தனது தந்தையின் ஆசைக்காவது அவர் மீண்டும் போதையை கையில் எடுக்காமல் இருக்கலாமே என்று கூறும் ரசிகர்களும் உள்ளார்கள். அதேநேரத்தில் ஷைன் டாம் சாகோ அந்த வீடியோவில் வேண்டும் என்றே அவ்வாறு விளையாட்டுத் தனமாக பேசி இருக்கலாம், வீடியோவை மட்டும் பார்த்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் என்றும் பலரும் கருத்து தெர்வித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











