»   »  மீண்டும் கோலிவுட்டுக்கு வரும் மம்முட்டி, திலீப்!

மீண்டும் கோலிவுட்டுக்கு வரும் மம்முட்டி, திலீப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் தமிழுக்கு வருகின்றனர் மலையாளத்தின் முன்னணி நடிகர்கள் மம்முட்டியும், திலீபும்.

சென்னையிலேயே இருந்தாலும், மம்முட்டிக்கு தமிழில் வாய்ப்பு கிடைத்தது தொண்ணூறுகளில்தான். முதல் படம் மௌனம் சம்மதம். அடுத்த படமே ரஜினியுடன் அமைந்தது. அதுதான் தளபதி.

அந்தப் படத்தின் வெற்றியும் புகழும் மம்முட்டிக்கு ஏராளனமான தமிழ் ரசிகர்களை அமைத்துக் கொடுத்தது.

மம்முட்டி

மம்முட்டி

தமிழில் தொடர்ந்து அழகன், கிளிப்பேச்சு கேட்கவா, மறுமலர்ச்சி, மக்கள் ஆட்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக தமிழில் அவர் நடித்தது வந்தே மாதரம் என்ற படத்தில்தான்.

ராம் இயக்கத்தில்

ராம் இயக்கத்தில்

பின்னர் தமிழில் நடிக்கவில்லை. இப்போது கற்றது தமிழ், தங்க மீன்கள் படங்களைத் தந்த ராம் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் மம்முட்டி.

திலீப்

திலீப்

அடுத்து தமிழில் நடிக்கவிருக்கும் இன்னொரு மலையாள முன்னணி நடிகர் திலீப். இவர் தமிழில் நடித்த முதல் படம் ராஜ்ஜியம். அதன் பிறகு தமிழில் நடிக்க அவர் முயற்சி செய்தாலும் எதுவும் சரியாக அமையவில்லை.

மணிகண்டன் இயக்கத்தில்

மணிகண்டன் இயக்கத்தில்

இப்போது கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடிப் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

English summary
Malayalam leading actors Mammootty and Dileep are making their comeback to Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil