»   »  மம்முட்டியும், 3 குட்டிகளும்!

மம்முட்டியும், 3 குட்டிகளும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிங்கிள் விண்டோ சிஸ்டம் (ஒரு நாயகி) மலையாள ஹீரோக்களுக்குப் போரடித்துப் போய் விட்டது போலும். மல்ட்டி விண்டோ (ரெண்டுக்கு மேற்பட்ட ஜோடி) முறைக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவில் ரொம்ப காலமாகவே ஒரு பழக்கம், புழக்கத்தில் உள்ளது. அதாவது ஹீரோ ஒருத்தர், நாயகிகள் மட்டும் இருவர். இது ரொம்ப காலமாகவே தெலுங்கு சினிமாவில் இருந்து வரும் பழக்கம்.

இரண்டு நாயகிகளுக்கும், ஹீரோவுடன் தலா 2 பாட்டுக் கொடுத்து விடுவார்கள். இதுபோக மூன்று பேரும் சேர்ந்து ஒரு பாட்டுக்கு கூட்டாங் குத்தாட்டம் போடுவார்கள்.

இந்தப் பழக்கம் அவ்வப்போது தமிழ் சினிமாவுக்கும் வந்து போகும். சில நேரங்களில் ரெண்டு, நாலு கூட ஆகலாம். அதெல்லாம் தயாரிப்பாளரின் பட்ஜெட்டைப் பொருத்தது.

இப்போது இந்தப் பழக்கம் மலையாளத்திற்கும் தொற்றியுள்ளது. இதுதொடர்பாக மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி மற்றும் மோகன் லால் ஆகியோருக்கு இடையே பெரும் போட்டியே ஏற்பட்டுள்ளது.

சுரேஷ் கோபி ஒரு படத்தில் நான்கு நாயகிகளுடன் நடிக்கிறார். திலீப் மூன்று ஹீரோயின்களுடன் நடிக்கிறார்.அதேபோல காலேஜ் குமரன் என்ற படத்தில் 6 ஜோடிகளுடன் அசத்துகிறார் மோகன் லால். விமலா ராமன், ரம்யா நம்பீசன், சம்விருத்தா ஆகியோர் அந்த 6ல் 3 ஹீரோயின்களாம். மற்றவர்கள் தேர்வு நடந்து வருகிறது.

இப்போது மம்முட்டியின் டர்ன்.

புதிதாக ஒப்பந்தமாகியுள்ள குட்டி ஷ்ரங்கு என்ற படத்தில் 3 ஜோடிகளுடன் நடிக்கிறாராம் மம்முட்டி. ஷாகி கருண் படத்தை இயக்குகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இசைஞானியும், மம்முட்டியும் சமீபத்தில் இணைவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே பழசி ராஜா உள்ளிட்ட இரு படங்களுக்கு இசையமைத்துள்ள ராஜா இப்போது குட்டி ஷ்ரங்குவுக்கும் இசையமைக்கப் போகிறார்.

பாண்டிட் க்வீன் படத்துக்கு திரைக்கதை அமைத்த பரூக் தொண்டிதான் குட்டி ஷ்ரங்கு படத்திற்கும் திரைக்கதை அமைக்கிறார். ஹாலிவுட் புகழ் கேமராமேன் ரேனெடா பெர்டா கேமராவைக் கையாளுகிறார்.

சென்னையில் அக்டோபர் 15ம் தேதி பிரசாத் ஸ்டுடியோவில் பூஜை போடப்படுகிறது. அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்குகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil