twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் நண்பன் பெற்றுத்தந்த ஆஸ்கார் விருது: மணிவண்ணன் பற்றி சத்யராஜ்

    By Mayura Akilan
    |

    அமைதிப்படை படத்தின் மூலம் எனது நண்பன் மணிவண்ணன் எனக்கு மிகப்பெரிய பெருமையை தேடி தந்திருக்கிறார் என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார் சத்யராஜ்.

    அமைதிப்படை படத்தில் அமாவாசை சத்யராஜ் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று படிப்படியா நாகராஜ சோழனாக மாறும் காட்சியமைப்பினை திரைப்பட ரசிகர்கள் என்றைக்கும் மறக்க முடியாது. இந்த காட்சியினை அமெரிக்காவில் உள்ள திரைப்படக் கல்லூரியில் பாடமாக வைத்திருக்கின்றனராம்.

    மறைந்த இயக்குநர் மணிவண்ணன் கடைசியாக இயக்கிய நாகராஜசோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ படத்திலும் சத்யராஜ்தான் ஹீரோ. இருவரும் நீண்டகால நண்பர்கள். இருவரும் இணைந்து பல படங்களில் பணிபுரிந்துள்ளனர். நண்பனின் மரணத்தை யாரலும் அவ்வளவு எளிதாக தாங்கிக் கொள்ள முடியாது. துயரத்தில் இருக்கும் நிலையிலும் நண்பன் ஏற்படுத்திக் கொடுத்த பெருமையினை நினைவு கூர்ந்துள்ளார்.

    அமாவாசை டூ நாகராஜசோழன்

    அமாவாசை டூ நாகராஜசோழன்

    தேங்காய் பொறுக்கும் அமாவாசைதான் சத்யராஜ். அவரை எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கவைத்து நாகராஜசோழன் எம்.ஏ வாக மாற்றுவார் மணிவண்ணன்.

    தெனாவெட்டான நடிப்பு

    தெனாவெட்டான நடிப்பு

    தேர்தல் முடிந்து அறிவிப்பு வெளியாகும் போது ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி நிலவரம் வரவர சேரில் உட்காருவதில் படிப்படியாக முன்னேற்றம் காட்டுவார். காதலியின் தோற்றம் கண்ணை மறைக்கிறது.

    5000 ஓட்டில் இருந்து 50000 ஒட்டு

    5000 ஓட்டில் இருந்து 50000 ஒட்டு

    5ஆயிரம் ஓட்டு முன்னணி என்ற உடனே சேர் போட்டு அமரும் சத்யராஜ், 8ஆயிரத்தில் லேசாக நகர்வார். 15, ஆயிரம் ஓட்டு முன்னணி என்ற உடன் சாய்ந்து அமர்வார். 25,000 ஓட்டு முன்னணி என்ற உடன் சிகரெட்டை நன்றாக இழுத்து புகையை விடுவார். கீழே புகையை விடலாமா என்று யோசித்து பின்னர் மேல் நோக்கி புகையை விடுவார். 35,000 ஓட்டு முன்னணி என்ற உடன் கால் மேல் கால் போட்டு அமர்வார். உடனே மணிவண்ணன், அமாவாசை நீயா இப்படி என்று கேட்க? நாகராஜசோழன் என்று தெனாவெட்டாக பதிலளிப்பார். 50000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி என்று அறிவித்த உடன் கண்ணாடி அணிந்து அசல் அரசியல்வாதியாக கெத்து காட்டுவார்.

    அமெரிக்காவில் பாடம்

    அமெரிக்காவில் பாடம்

    இந்த காட்சிக்கு தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளும். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்த காட்சி இது. இதனைத்தான் இப்போது அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் பாடமாக வைத்துள்ளனர். பாடிலாங்குவேஜ் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்று உதாரணத்திற்கு காட்டியுள்ளனராம்.

    சத்யராஜ் நெகிழ்ச்சி

    சத்யராஜ் நெகிழ்ச்சி

    மணிவண்ணன் இறந்த பின்னர் சோகத்தில் ஆழ்ந்துள்ள சத்தியராஜ் இதனை நினைவு கூர்ந்துள்ளார். முதலில் அமைதிப்படை படத்தில் நடிக்கலாமா? வேண்டாமா என்று யோசித்தேன். மணிவண்ணன் கதை சொன்ன உடன் தேர்தல் ரிசல்ட் காட்சியில் சரண்டர் ஆகிவிட்டேன்.

    ஆஸ்கார் விருது

    ஆஸ்கார் விருது

    இந்த காட்சியைத்தான் அமெரிக்காவில் பாடமாக வைத்திருக்கின்றனர். இதை விட வேறு என்ன விருது வேண்டும். என் நண்பன் எனக்கு வாங்கித்தந்த ஆஸ்கார் விருது இதுதான் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    English summary
    Actor sathiyaraj has hailed late director manivannan for offering him a powerful character in Amathipadai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X