இன்பன் உதயநிதி ஹீரோவாக ரெடியாகிட்டாராம்.. வாரிசுகளை இயக்கும் ரூட்டுக்குத் திரும்பிய மாரி செல்வராஜ்?

சென்னை: ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து நடத்தி வந்த நிலையில், அவர் அரசியலுக்குள் நுழையும் போது, அந்த பொறுப்பில் இருந்து விலகினார். ஆனால், தற்போது அந்த பொறுப்பை தனது மகன் இன்பன் உதயநிதிக்கு வழங்கினார். தனுஷின் இட்லி கடை படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்த நிலையில், ரெட் ஜெயன்ட் சார்பில் இன்பன் உதயநிதி அந்த படத்தை வெளியிட்டார்.

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் பட்ஜெட் 60 முதல் 80 கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதுவரை அந்த படம் உலகளவில் 50 கோடி மட்டுமே வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.

Mari Selvaran will direct Inban Udhayanidhi debut movie buzz going on
Photo Credit:

நடிகர் தனுஷின் சம்பளமே தற்போது 50 முதல் 60 கோடி உள்ள நிலையில், தொடர்ந்து தமிழ்நாட்டில் அவருடைய படங்கள் வசூலில் 50 கோடி வசூல் செய்யவே திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

அப்பாவை போலவே ஹீரோவாகும் இன்பநிதி: விஜய்யின் குருவி படத்தை தயாரித்து தயாரிப்பாளராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலின், சூர்யாவின் ஆதவன் படத்தில் கேமியோ ரோலில் நடித்தார். அதன் பின்னர் ராஜேஷ். எம் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தற்போது பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் ஹீரோக்களாக உருவாகி வரும் நிலையில், அப்பாவை போலவே தயாரிப்பாளராகவும் ஹீரோவாகவும் இன்பன் உதயநிதி மாறப் போகிறார் என்கின்றனர்.

துருவை தொடர்ந்து இன்பநிதியை இயக்கும் மாரி செல்வராஜ்?: இயக்குநர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கிய நிலையில், விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கியுள்ளார். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி பைசன் வெளியாகிறது. இந்நிலையில், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதற்கு முன்பாக மாரி செல்வராஜ் இன்பன் உதயநிதியை ஹீரோவாக வைத்து ஒரு சமூக கருத்துக் கொண்ட படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவிலேயே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X