»   »  ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்

ஜெ. என்னைக்கு பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம் தான்: பவர்ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றைக்கு பீச்சில் சென்று படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம், சண்டை, சச்சரவாக உள்ளது என்று பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

காவியன் இயக்கி வரும் சிரிக்க விடலாமா படத்தில் நடித்து வருகிறார் பவர்ஸ்டார் சீனிவாசன். படத்தில் நிதின் சத்யா, சந்தான பாரதி உள்ளிட்டோரும் உள்ளனர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பவர்ஸ்டார் கூறியதாவது,

முதல்வர்

முதல்வர்

முதல்வர் பதவிக்காக எவ்வளவு அடிதடி, சண்டை எல்லாம் நடக்கும் வேலையில் நானும் ஒரு படத்தில் முதல்வராக நடித்துள்ளேன். முதல்வராக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருந்தாலும் என் ஆசையை அந்த படம் மூலம் நிறைவேற்றிக் கொண்டேன்.

போன்

போன்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் எனக்கு போன் செய்து எல்லோரும் முதல்வராகும் போது நீங்கள் ஏன் ஒரு கட்சியை துவங்கி முதல்வராகக் கூடாது என்று கேட்டார்.

பணம்

பணம்

கட்சியை துவங்க நிறைய பணம் தேவைப்படுமே என்று நான் அந்த ரசிகரிடம் கூற அவரோ அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிச்சலாக கூறினார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் என் குடும்பத்தில் ஒரு சகோதரியை இழந்தது போன்று உள்ளது. அவர் என்று பீச்சில் படுத்தாரோ அன்றில் இருந்து அங்கு ஒரே கலவரம், சண்டை, சச்சரவாக உள்ளது என்று பவர் ஸ்டார் தெரிவித்துள்ளார்.

English summary
Powerstar Srinivasan said that Marina beach looks tense from the day former CM Jayalalithaa was laid to rest there.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil