»   »  நண்பன் விஜய் படங்களுக்கு மறக்காமல் வாழ்த்துக் கூறுவேன் - சூர்யா

நண்பன் விஜய் படங்களுக்கு மறக்காமல் வாழ்த்துக் கூறுவேன் - சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கும், விஜய்க்குமான நட்பு இப்போதும் வலுவாகவே இருக்கிறது என நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.

சூர்யா நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான 'நேருக்கு நேர்' திரைப்படத்தில் மற்றொரு நாயகனாக விஜய் நடித்திருந்தார். 'நேருக்கு நேர்' படத்துக்குப் பின் 'பிரண்ட்ஸ்' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

Me and Vijay both our Friendship is Very Strong says Surya

'நேருக்கு நேர்' திரைப்படம் வெளியாகி 19 வருடங்கள் கடந்து விட்டன. எனினும் எங்களது நட்பில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என சூர்யா கூறுகிறார்.

இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் "எனக்கும், விஜய்க்கும் இடையிலான நட்பு இன்னும் வலுவாகவே இருக்கிறது. என்னுடைய மனைவி ஜோதிகா, விஜய் மனைவி சங்கீதா, அஜீத் மனைவி ஷாலினி மூவருக்கும் நல்ல தோழிகளாகத் திகழ்கின்றனர்.

விஜய்யின் 40 வது பிறந்தநாளில் நான் சென்று அவரை வாழ்த்தினேன். அதேபோல என்னுடைய 40 வது பிறந்தநாளுக்கு விஜய் நேரடியாக வந்து வாழ்த்தினார்.

விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் என்னைக் கவரும்போது அவருக்கு மறக்காமல் வாழ்த்துக்கூறி மெசேஜ் அனுப்பி விடுவேன்" என்று தங்களது நட்பு குறித்து சூர்யா கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய்-சூர்யா நட்பு 19 வருடங்களைக் கடந்தும் கூட, இன்னும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
'Me and Vijay both our Friendship is Very Strong' Actor Surya Says In Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil