»   »  பின் மண்டையில் அடிப்போம்.. "மிரட்டிய செல்வம்".. பயந்து நடுங்கிய "பட்ற" மிதுன்!

பின் மண்டையில் அடிப்போம்.. "மிரட்டிய செல்வம்".. பயந்து நடுங்கிய "பட்ற" மிதுன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைக்கு ஹீரோக்கள் எவ்வளவு ரிஸ்க் ஆன காட்சி என்றாலும் ரஸ்க் சாப்பிடுவதுபோல அசால்ட்டாக நடிக்கின்றனர். ஆனால் பட்ற படத்தில் நடித்துள்ள புதுமுக ஹீரோ மிதுன், கிளைமேக்ஸ் சண்டை காட்சியில் நடிக்க அஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜி.கே.சினிமாஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் வீ.காந்திகுமார் தயாரிக்கும் புதிய படம் பட்ற. சுனோஜ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். புதுமுக இயக்குனர் ஜெயந்தன் இதனை இயக்கியுள்ளார்.

மிதுன் - வைதேகி

மிதுன் - வைதேகி

இதில் மிதுன் தேவ் ஹீரோவாகவும், வைதேகி ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர்,மற்றும் சாம் பால், ரேணிகுண்டா கணேஷ். புலிபாண்டி, ஆதேஷ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். நமது அன்றாட வாழ்வில் நாம் சந்திக்க விரும்பாத ஆனால் சந்திக்கும் நிழல் மனிதர்கள் பற்றியதே படத்தின் கதை.

வக்கீல் வில்லன்

வக்கீல் வில்லன்

இப்படத்தில் சாம் பால் வில்லனாக அறிமுகமாகிறார். இவர், பிரபல வழக்கறிஞரும், தொழிலதிபரும் கூட. என்னுடைய ஆஜானுபாகுவான உடலும், உயரமும் இந்த கதாப்பாத்திற்கு கச்சிதமாய் பொருந்தும் என்று ஜெயந்தன் கூறினார். பணத்திற்காக எதையும் செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் வில்லன்.

கதாநாயகன் அனுபவம்

கதாநாயகன் அனுபவம்

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நாயகன் மிதுன் கூறுகையில், "சிறு வயது முதலே சினிமா என்றால் ஆர்வம் அதிகம். நடனம் , நடிப்பு என பல்வேறு விதமான பயிற்சிகளை மேற்கொண்டேன்.

ஒரு பிரபல சினிமா ஆல்பத்தில் எனது புகைப்படத்தை பார்த்து என்னை இயக்குனர் ஜெயந்தன் அழைத்தார். எனது நடிப்பு மற்றும் உடல் கட்டமைப்பும் இந்த கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக இருக்கும் என்றுக் கூறி உடனே ஷூட்டிங் ஆரம்பித்தார்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

க்ளைமாக்ஸ் பகுதி தனியாய் படப்பிடிப்பு செய்யப்பட்டது.
இறுதி சண்டைக் காட்சிகாக எனது உடற்கட்டை மேம்படுத்த வேண்டியிருந்தது. தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டேன்.

விபத்தில் சிக்கிய குடும்பம்

விபத்தில் சிக்கிய குடும்பம்

ஷூட்டிங்கிற்கு சில நாட்கள் உள்ள நிலையில் எனது குடும்பத்தில் அனைவரும் ஒரு சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதையறிந்த இயக்குனர் ஜெயந்தன் படப்பிடிப்பை நிறுத்தினார்.

மருத்துவமனையில்

மருத்துவமனையில்

முழு ‘பட்ற' குழுவும் எனக்கு மிகவும் பக்க பலமாய் இருந்தனர். நானும் மருத்துவமனையில் இருந்துகொண்டே எனது உடற்பயிற்சிகளை தொடர்ந்தேன்.

சண்டைக்காட்சி

சண்டைக்காட்சி

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ஒரு பெரிய மரப்பலகையால் பின் மண்டையில் அடி வாங்க வேண்டும் என்றார் சண்டை பயிற்சியாளர் ‘மிரட்டல்' செல்வம் கூறினார். அடிப்பவர் கையில் உண்மையான மரப்பலகை பார்த்த உடனே எனக்கு பயம் வந்து விட்டது.

டூப் போடலாமே

டூப் போடலாமே

இயக்குனரிடம் ‘டூப் போட்டுக்கலாமா' என்று கேட்டேன். இந்த காட்சி யதார்த்தாமாக அமைய வேண்டும் என்று கூறி ஊக்கப்படுத்தினார். அக்காட்சியும் நன்றாக வந்திருக்கிறது.

அனைவருக்கும் நன்றி

அனைவருக்கும் நன்றி

ஓர் நடிகனாக என்னை வளர்த்துக்கொள்ள ‘பட்ற' படக் குழுவினர் மிகவும் உதவினர். எனது தயாரிப்பாளர் காந்தி குமார், இயக்குனர்
ஜெயந்தன் மற்றும் அனைத்து குழுவினர்க்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

English summary
Patra is a Tamil Movie. Directed by Jayantan. Mithunn Dev and Vaidhehi in lead role. Cinema is a place where opportunity meets talents. It is vividly witnessed that those who shines today made a place themselves with the immense talent and peseverance they possess. Mithunn , the newbie actor in k-town is getting ready for the long run with his debut film ‘Patra’ to be released soon

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil