»   »  மோடி நம்மை ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார், எதிர்த்து போராட வேண்டும்: மன்சூர் அலிகான்

மோடி நம்மை ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார், எதிர்த்து போராட வேண்டும்: மன்சூர் அலிகான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரதமர் மோடி நம்மை எல்லாம் ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார் என நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் மன்சூர் அலி கான் கொஞ்சம் கொஞ்சம் பட இசை வெளியீட்டு விழாவில் கூறுகையில்,

மோடி

மோடி

கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் இரவோடு இரவாக 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்து பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டார்.

ராப்பிச்சைக்காரன்

ராப்பிச்சைக்காரன்

நம் அனைவரையும் மோடி ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார். மக்கள் சில்லரை இல்லாமல் வீதி வீதியாக அலைகிறார்கள். சில்லரை வாங்க வங்கிகள், ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நாள் முழுவதும் நிற்கிறார்கள்.

பணம்

பணம்

செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் அல்லாடுகிறார்கள். இதனால் அவர்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்லவில்லை. கடந்த 5 நாட்களாக தியேட்டர்கள் காத்து வாங்குகின்றன.

போராட்டம்

போராட்டம்

மோடியின் நடவடிக்கையால் சினிமா துறை முடங்கிவிட்டது. இதற்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து போராட வேண்டும்.

ரூ.2000

ரூ.2000

ரூ.2000 நோட்டை மடித்து பாக்கெட்டில் நான்கு முறை வைத்தால் கிழிந்துவிடும். அந்த நிலையில் உள்ளது. நம் கலைஞர்களிடம் கேட்டிருந்தால் கூட இதை விட நல்ல நோட்டை அளித்திருப்பார்கள்.

English summary
Actor Mansoor Ali Khan said that PM Modi has made us beggars by scrapping old notes suddenly.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil