என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு தாளம் போட்ட மோகன்லால்... வைரலாகும் வீடியோ

கொச்சி : நடிகர் மோகன்லால் தற்போது ப்ருத்விராஜ் இயக்கும் ப்ரோ டாடி, த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கும் 12 th man ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 12 th man படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு சமீபத்தில் தான் கொச்சி திரும்பி உள்ளார் மோகன்லால்.

த்ரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளார் மீனா. இவர்களின் காம்போ தொடர்ந்து செம ஹிட்டாகி வருவதால், ப்ரோ டாடி படத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனாவையே நடிக்க வைத்துள்ளார் ப்ருத்விராஜ். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது.

வைரல் ஃபோட்டோ

வைரல் ஃபோட்டோ

ப்ரோ டாடி படத்தின் ஷுட்டிங்கிற்காக ஐதராபாத் சென்ற போது தான் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, மோகன்லால் மற்றும் மீனா தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார். அப்போது மோகன்பாபு மற்றும் மோகன்லாலுடன் மீனா எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் செம வைரலாகின.

இசையில் ஆர்வம்

இசையில் ஆர்வம்

பொதுவாக மோகன்லாலுக்கு நடிப்பு எந்த அளவிற்கு பிடிக்குமோ, அதே அளவிற்கு இசை மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பாடிய வீடியோக்கள் பலவற்றை இவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி உள்ளனர். அப்படி மற்றொரு வீடியோவையும் மோகன்லால் ரசிகர்கள் வைரலாக்கி உள்ளனர்.

தாளம் போட்ட மோகன்லால்

தாளம் போட்ட மோகன்லால்

மோகன்லால் சமீபத்தில் இசை கலைஞர்கள் சிலருடன் சேர்ந்து சூப்பர் தமிழ் பாடலான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு தாளம் போட்டுள்ளார். மோகன்லால் Cajon வாசித்த இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலர் இந்த வீடியோவை அதிக அளவில் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

ப்ருத்விராஜும் களம் இறங்கினார்

ப்ருத்விராஜும் களம் இறங்கினார்

மோகன்லால் Cajon இசையமைத்த வீடியோ வெளியான அடுத்த நாளே ப்ருத்டிராஜ் Cajon இசையமைத்த வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி உள்ளது. மணிக்கே மகே ஹிதே என்ற பாடலை தான் ப்ருத்விராஜ் இசைத்துள்ளார். இந்த வீடியோவை ப்ருத்விராஜின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட, ரசிகர்கள் அதை வைரலாக்கி உள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு பின் கூட்டணி

12 ஆண்டுகளுக்கு பின் கூட்டணி

ப்ருத்விராஜ் இரண்டாவதாக இயக்கி உள்ள ப்ரோ டாடி படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்தது. மோகன்லால் அடுத்தபடியாக டைரக்டர் ஷாஜி கைலாஷ் இயக்கும் Alone படத்தில் நடிக்க உள்ளார். மோகன்லாலும், ஷாஜி கைலாஷும் கிட்டதட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ள படம் இது. மோகன்லாலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இதுவும் ஒன்றாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X