»   »  படங்களில் நடிப்பதை குறைக்கப் போகிறேன்: சூப்பர் ஸ்டார் அதிரடி முடிவு

படங்களில் நடிப்பதை குறைக்கப் போகிறேன்: சூப்பர் ஸ்டார் அதிரடி முடிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைக்கப் போவதாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார்.

மோகன்லால் மலையாளம் தவிர்த்து தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். இது தவிர அவர் குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் படங்கள் பற்றி கூறுகையில்,

பயணம்

பயணம்

எனக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். புத்தகம் படிக்க பிடிக்கும். ஆனால் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால் அதற்கு நேரம் கிடைப்பது இல்லை.

படங்கள்

படங்கள்

பயணம் செய்ய ஏதுவாக படங்களில் நடிப்பதை குறைக்க முடிவு செய்துள்ளேன். ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்ட விரும்புகிறேன்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரசிகர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் புதுப்புது முயற்சியில் இறங்குகிறேன். ஒவ்வொரு படத்தை முடித்த பிறகும் ஒரு குட்டி பிரேக் எடுத்து எங்காவது செல்ல விரும்புகிறேன். ஆனால் முடியவில்லை.

எனக்கு

எனக்கு

எப்பொழுது பார்த்தாலும் படங்களில் பிசியாக உள்ளேன். எனக்கு என நேரம் ஒதுக்க விரும்புகிறேன். அதற்காகவே படங்களின் எண்ணிக்கையை குறைக்க விரும்புகிறேன்.

English summary
Mohanlal stated that he is planning to reduce the number of films eventually, and wants to travel around the world. Mohanlal also revealed that he loves to take a small vacation after every film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil