»   »  மோசமான நம்மிடம் இருந்து பெண்களை யார் பாதுகாப்பது?: நடிகர் சித்தார்த்

மோசமான நம்மிடம் இருந்து பெண்களை யார் பாதுகாப்பது?: நடிகர் சித்தார்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் பெண்களை நம்மிடம் இருந்து யார் பாதுகாப்பது? பூமியில் உள்ள மோசமான ஆண்களில் நாமும் அடக்கம் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். பெண்கள் அரைகுறை ஆடை அணிந்ததால் அந்த சம்பவம் நடந்தது என கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் சித்தார்த் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்தியா

இந்தியாவில் பெண்களை நம்மிடம் இருந்து யார் பாதுகாப்பது? பூமியில் உள்ள மோசமான ஆண்களில் நாமும் அடக்கம். இதை நினைத்து வெட்கப்படுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்.

ஆடை

ஒரு பெண் தனக்கு பிடித்த உடையை தான் அணிய வேண்டும். உடையை தொடர்புபடுத்தி அசிங்கப்படுத்துவோர் உடனே நிறுத்திக் கொள்ளுங்கள். பெண்களின் தேர்வு பற்றி பாடம் எடுப்பதை நிறுத்துங்கள்.

பலாத்காரம்

பாலியல் அத்துமீறல்கள், பலாத்காரத்தை எதுவாலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு விதிவிலக்கும் இல்லை. இதை மறந்தவர்களை தான் மாற்ற வேண்டும்.

ஆண்கள்

நீங்கள் எதையாவது பார்ப்பதால் அதை அடைய நினைக்கும் உரிமை வந்துவிடாது. உங்களின் கருத்தை மாற்றுங்கள்! பார்ப்பதை மாற்ற நினைப்பதை நிறுத்துங்கள் ஆண்களே.

English summary
It is very sweet of actor Siddharth to take to twitter to show his support for women at a time when molestation cases are on rise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil