»   »  அனுமனைப் போல செயல்பட்டு, அணிலைப் போல வாழ்ந்த எம்எஸ்வி! - ரஜினி

அனுமனைப் போல செயல்பட்டு, அணிலைப் போல வாழ்ந்த எம்எஸ்வி! - ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராமனுக்கு அனுமனைப் போல செயல்பட்டு, அணிலைப் போல வாழ்ந்தவர் இசைக் கடவுள் எம்எஸ்வி, என்று புகழாரம் சூட்டினார் ரஜினிகாந்த்.

இளையராஜா நடத்திய என்னுள்ளில் எம்எஸ்வி என்ற இசை நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசிய ரஜினியிடம், இளையராஜா சில கேள்விகள் கேட்டார்.

அப்போது எம்எஸ்வி குறித்து ரஜினியின் கருத்தைக் கேட்டார் இளையராஜா.

திறமை

திறமை

அதற்கு ரஜினி கூறிய பதில்:

திறமை என்பது கடவுள் கொடுப்பது. பெற்ற தாய், தந்தையிடம் இருந்து அது வருவதில்லை. ஜென்மம் ஜென்மமாக வரக்கூடியது. அது ஒரு பிராப்தாம். சரஸ்வதி கடாட்சம். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அது கிடைத்திருக்கிறது.

தலைகனம் இல்லாதவர்

தலைகனம் இல்லாதவர்

பணம், பெயர், புகழ் போன்றவை வரும்போது தலைகால் நிற்காது. ஆனால் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிறு கடுகளவுகூட தலைக்கனம் இல்லை. அவர் ஒரு இசை கடவுள்," என்றார்.

எப்படி வரத் தோன்றியது?

எப்படி வரத் தோன்றியது?

அடுத்து, 'இந்த திரையுலகம் மிகப் பெரியது. எவ்வளவோ பேர் இருக்காங்க. நான் யாரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை. உங்களைக் கூட அழைக்கவில்லை. ஆனால் நீங்களாக வந்து அமர்ந்து ரசிக்கிறீர்கள். இங்கு வரவேண்டும் என உங்களை தூண்டியது எது?" என்றார்.

புகழின் உச்சிக்கு..

புகழின் உச்சிக்கு..

அதற்கு பதிலளித்த ரஜினி, "1960 மற்றும் 70 கால கட்டத்தில் ஜாம்பவான்களாக நடிகர்கள், டைரக்டர்கள், பாடகர்கள் பலர் இருந்தனர். எம்.ஜி.ஆர் சார், சிவாஜி சார், பாலசந்தர், ஸ்ரீதர், டி.எம்.சவுந்தரராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அணில் மாதிரி

அணில் மாதிரி

ராமருக்கு உதவிய அனுமன் போல் செயல்பட்டாலும், ஒரு அணில் மாதிரியே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப்போவது இல்லை. அப்பேர்ப்பட்ட மகானின் இசை பற்றி நீங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், உங்களைக் கவர்ந்த அவரது பாடல்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்," என்றார்.

English summary
Rajinikanth narrated that late legend MSV was worked like Hanuman and lived as a Squirrel in his life.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil