»   »  முத்தையாவா, ரஞ்சித்தா, அட்லீயா: இங்கி பிங்கி பாங்கி போடும் சூர்யா

முத்தையாவா, ரஞ்சித்தா, அட்லீயா: இங்கி பிங்கி பாங்கி போடும் சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ். 3 படத்தை அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பது என்ற யோசனையில் உள்ளாராம் சூர்யா.

சூர்யா சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான எஸ்.3.இல் பிசியாக உள்ளார். இந்த படத்தை அடுத்து அவரை வைத்து படம் எடுக்க முத்தையாவும், கபாலி இயக்குனர் ரஞ்சித்தும் காத்துக் கிடக்கிறார்கள்.

Muthaiah, Ranjith, Atlee: Whom will Suriya select?

முத்தையாவும், ரஞ்சித்தும் சூர்யாவிடம் ஒரு வரியில் கதையை கூறியுள்ளார்களாம். இதற்கிடையே அட்லீயும் சூர்யாவை வைத்து படம் எடுக்க காத்துக் கொண்டிருக்கிறார். எஸ்.3-ஐ முடித்த பிறகு இந்த மூன்று பேரில் யார் படத்தில் நடிப்பது என்ற யோசனையில் உள்ளாராம் சூர்யா.

கபாலி படத்தை பார்த்து அசந்து போன விஜய் ரஞ்சித்திடம் தனக்கு ஒரு படம் பண்ணுமாறு கூறியுள்ளார். ஆனால் ரஞ்சித் சூர்யாவுக்காக காத்திருக்கிறார். விஜய்யை வைத்து தெறி படத்தை கொடுத்து தியேட்டர்களை தெறிக்க விட்ட அட்லீ சிங்கத்தை வைத்து கர்ஜிக்க விரும்புகிறார்.

சூர்யா அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் தெரியும் என்று கூறப்படுகிறது.

English summary
Suriya is reportedly in a dilemma to choose among directors Muthaiah, Ranjith and Atlee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil