”எனது உடைந்த எலும்புகள் உங்கள் உடைந்த எலும்புகளைப் பார்த்து”.. ஜாக்கி சானுடன் ஹ்ரித்திக் ரோஷன்!
மும்பை: பாலிவுட் ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷன், மார்ஷியல் ஆர்ட்ஸ் ஜாம்பவான் ஜாக்கி சானை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதிலிருந்து, அவை சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இருபெரும் ஆக்ஷன் நட்சத்திரங்களும் ஒரே புகைப்படத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
ஹ்ரித்திக் ரோஷன், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (hrithikroshan) இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ஜாக்கி சான் தோளின் மீது கையைப் போட்டுக்கொண்டு ஹ்ரித்திக் புன்னகைக்கிறார். இன்னொரு ஜூம் போட்டோவில் இருவருமே உற்சாகமாகச் சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.

ஜாக்கி சானை சந்தித்த ஹ்ரித்திக் ரோஷன்: இந்த புகைப்படங்களுடன் ஹ்ரித்திக் ஒரு சுவாரஸ்யமான கேப்ஷனையும் சேர்த்துள்ளார். அதில், "இங்கு உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி ஐயா @jackiechan. எனது உடைந்த எலும்புகள் உங்கள் உடைந்த எலும்புகளைப் பார்த்துப் பெருமைப்படுகின்றன. எப்போதும் போல," என்று குறிப்பிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் சூப்பர் சந்திப்பு: இந்த புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகிவிட்டன. பெவர்லி ஹில்ஸ், அமெரிக்காவில் ஒரு கட்டிடத்திற்கு வெளியே இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஹ்ரித்திக் ரோஷன் வெள்ளை நிற ஜாக்கெட், டி-ஷர்ட், பேன்ட், காலணிகள் மற்றும் தொப்பி அணிந்துள்ளார்.
ஜாக்கி சான், அடர் நீல நிற ஜாக்கெட் மற்றும் பேன்ட் அணிந்து, தொப்பி மற்றும் கண்ணாடியுடன் காட்சியளிக்கிறார். இந்தப் புகைப்படங்கள் இரண்டும் பிரபலங்களின் சந்திப்பைப் பற்றி பல்வேறு யூகங்களும் வெளியாகி வருகின்றன. இருவரும் சேர்ந்து கூடிய சீக்கிரம் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார்களா என்றும் இந்திய ரசிகர்களை மீண்டும் ஜாக்கி சான் கவரும் விதத்தில் ஒரு தரமான சம்பவம் வேண்டும் என ரசிகர்கள் விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர்.
இருவரும் படம் பண்றாங்களா?: ஹ்ரித்திக் ரோஷன் தற்போது 'ஸ்டார்ம்' என்ற தனது முதல் OTT த்ரில்லர் தொடரை தயாரித்து வருகிறார். இது தவிர, இவரது சமீபத்திய பெரிய படமான 'வார் 2' ஓடிடியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அமெரிக்காவில் தனது காதலி சபா ஆசாத்துடன் ஹ்ரித்திக் ஜாலி டூரில் இருக்கும் போது அங்கே சுற்றுலாவுக்கு வந்த ஜாக்கி சானை அவர் சந்தித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜாக்கி சானின் சமீபத்திய ரிலீஸ் என்றால் அது 'தி ஷேடோஸ் எட்ஜ்' என்ற ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். மேலும், 'ரஷ் ஹவர் 4' படத்தில் கிறிஸ் டக்கருடன் மீண்டும் இணையலாம் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் உலா வருகின்றன.


Click it and Unblock the Notifications











