»   »  என் படங்களின் ரிலீஸை திருவிழாவாக்குவது என் ரசிகர்களே! - ரஜினி

என் படங்களின் ரிலீஸை திருவிழாவாக்குவது என் ரசிகர்களே! - ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

என் படங்களின் வெளியீட்டை திருவிழாவாக மாற்றுவது என் ரசிகர்கள்தான், என்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மும்பையில் நேற்று நடந்த 2.0 முதல் தோற்ற வெளியீட்டுக்குப் பிறகு, செய்தியாளர்கள் மற்றும் திரைத் துறையினரின் கேள்விகள் சிலவற்றுக்கு ரஜினி பதிலளித்தார்.

My fans make my film release like Diwali, says Rajinikanth

அவரிடம் உங்கள் திரைப்படங்கள் வெளியாகும் நாள் மட்டும் எப்படி தீபாவளி, புத்தாண்டு போல மாறிவிடுகிறது? என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த ரஜினி, "அதற்குக் காரணம் எனது ரசிகர்கள்தான். அவர்கள்தான் என் ஒவ்வொரு பட வெளியீட்டையும் தீபாவளி போல மாற்றுகிறார்கள். அவர்கள் இல்லாமல் நான் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது," என்றார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரஜினி, "2.0 இந்திய சினிமாவையே தலை நிமிர வைக்கும். இந்திய சினிமாவின் பெருமையாக நிற்கும்," என்றார்.

முன்னதாக விழா நடந்த அரங்கம் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்று ரஜினிக்கு வரவேற்பு அளித்தனர். அதனை கையசைத்தும், கும்பிட்டும் ஏற்றுக் கொண்டார் ரஜினி.

English summary
Rajinikanth says that his fans only make his every film release like Diwali and New Year celebrations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil